கண்டதும்… கேட்டதும்…

கண்டதும்… கேட்டதும்…, விஜயலெட்சுமி மாசிலாமணி, விஜயா பதிப்பகம், விலைரூ.70. பல நாடுகளில் கண்டதையும், கேட்டதையும் அனுபவப்பூர்வமாக எழுதியுள்ளார். பெண்கள் படும் துயர் பற்றியும் அக்கறையுடன் பதிவு செய்துள்ளார். சம காலத்தில் பல நிலையில் உள்ளோர் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புரட்சிக் கருத்துக்களை பதிவு செய்துள்ள பயண நுால். சிறுகதைகள் போல் உரையாடல் மொழியில் எழுதப்பட்டுள்ளது. சுவாரசியம் மிக்க சம்பவங்களைக் கொண்டது. நன்றி: தினமலர்,14/3/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

தென்கிழக்குத் தென்றல் தாவோ – சூபி – ஜென்

தென்கிழக்குத் தென்றல் தாவோ – சூபி – ஜென், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலைரூ.360. நுட்பமான பொருளை உணர்த்துவது ஜென் தத்துவமும், அதை தாங்கி நிற்கும் சிறுகதைகளும். அமைதி, ஒற்றுமை, கருணை, சமத்துவத்தை போதிப்பது, சூபியிசம். கருணை, அடக்கம், பணிவு போன்ற மகத்தான அறங்களை எளிய கோட்பாடாக விளக்குவது தாவோயிசம். இந்த மூன்று உயர் நெறிகளையும் அறிந்து சிந்தனை தெளிவுடன் பகிர்ந்துள்ள நுால். மனதின் நுண்ணிய ஆற்றலை மேம்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மூன்று தத்துவங்களும் தனித்தனி தலைப்புகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு தத்துவத்திலும் ஆர்வமுள்ள […]

Read more

வாசி யோகத்தில் மெய்ஞானம்

வாசி யோகத்தில் மெய்ஞானம், ஆர்.சுந்தர், விஜயா பதிப்பகம், விலைரூ.85 பஞ்சபூதங்களால் ஆனது மனித உடல். இந்த உடல் இயக்கத்திற்கு, காற்று முக்கிய பங்கு வகிக்கிறது. காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா என்று சித்தர் வாக்கின் படி, காற்று மிகவும் இன்றியமையாதது. காற்றை யோக முறையில் செயல்படுத்தும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. எட்டு வகை யோக முறைகளை விரிவாகப் பேசுகிறது. மெய்ஞானிகள் என்று துவங்கி, நல்ல மொழிகள் என்ற எட்டு தலைப்புகளுடன் நுால் நிறைவெய்துகிறது. சிவவாக்கியர், பட்டினத்தார், வள்ளலார், அவ்வையார் போன்ற சித்தர்களின் கருத்தை […]

Read more

சங்கிலிப் பூதத்தான்

சங்கிலிப் பூதத்தான், நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகம், விலைரூ.145 மொத்தம், 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் இடம்பிடித்துள்ள கதைகள், ஆனந்த விகடன் இதழில் அவ்வப்போது வெளியாகி, வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றவை. ஒவ்வொரு சிறுகதையும், எளிய மக்களின் வாழ்க்கை போராட்டத்தை வலி(மை)யாக எடுத்துக் காட்டுகிறது. நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000026410_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கல்வெட்டுகளில் தேவதாசி

கல்வெட்டுகளில் தேவதாசி,  எஸ்.சாந்தினி,  விஜயா பதிப்பகம், விலை: ரூ.100. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியரான எஸ்.சாந்தினிபீ எழுதிய சமீபத்திய நூல். ‘இடைக்கால தென்னகக் கோயில்களில் பணிப்பெண்கள்’ என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம். ஆணுக்கு நிகராக தேவரடியார்கள் பெற்ற சன்மானம், கோயில்களுக்கு அவர்கள் வழங்கிய நன்கொடைகள், அவர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போரட்டம் உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்களைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் இந்நூலில் விவரித்துள்ளார். தேவரடியார் முறையின் தோற்றம் தொடங்கி 1947-ல் முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியில் […]

Read more

வெல்ல நினைத்தால் வெல்லலாம்

வெல்ல நினைத்தால் வெல்லலாம்,  அ.அமல்ராஜ், விஜயா பதிப்பகம், பக்.368, விலை ரூ.300. வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விடை தரும் நூல். வெல்ல வேண்டும் என்று நினைத்தால் வெல்லலாம் என்றாலும் அப்படி நினைப்பதற்கே நம்மைத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்நூல் மனதின், எண்ணத்தின், சொல்லின், செயலின், பழக்கத்தின் வல்லமைகளை மிக விரிவாக விளக்குகிறது. மனம், எண்ணம், குணம், சொல், செயல், பழக்கம் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று இன்னொன்றின் மீது தாக்கம் ஏற்படுத்துபவை. எதிலும் கவனம் செலுத்த, நம்பிக்கை கொள்ள, […]

Read more

ஐயா (எ) 95 வயது குழந்தை

ஐயா (எ) 95 வயது குழந்தை, வடிவரசு, விஜயா பதிப்பகம், விலை: ரூ.80 பிள்ளை பாடிய தந்தை தமிழ் கிராமத்து வெள்ளந்தி மனிதரான தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், தனது தகப்பனையும் தாயையும் சென்னையிலிருந்து கோவைக்கு அவர்களின் வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும்தான் இந்நூல். வடிவரசு சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒருவர் வீட்டில் டிவி பார்க்கப்போய் அங்கேயே தூங்கிவிட, அந்த வீட்டுக்காரர் இவரைத் தூக்கிவந்து தெருவில் படுக்க வைத்துவிட்டுப் போய்விட்டாராம். மறுநாளே சில ஆடுகளை விற்று டிவி வாங்கிவந்து வைத்துவிட்டு, “உன் கூட்டாளியையெல்லாம் […]

Read more

பிள்ளை பாடிய தந்தை தமிழ்

பிள்ளை பாடிய தந்தை தமிழ், ஐயா (எ) 95 வயது குழந்தை, வடிவரசு, விஜயா பதிப்பகம், விலை: ரூ.80 கிராமத்து வெள்ளந்தி மனிதரான தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், தனது தகப்பனையும் தாயையும் சென்னையிலிருந்து கோவைக்கு அவர்களின் வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும்தான் இந்நூல். வடிவரசு சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒருவர் வீட்டில் டிவி பார்க்கப்போய் அங்கேயே தூங்கிவிட, அந்த வீட்டுக்காரர் இவரைத் தூக்கிவந்து தெருவில் படுக்க வைத்துவிட்டுப் போய்விட்டாராம். மறுநாளே சில ஆடுகளை விற்று டிவி வாங்கிவந்து வைத்துவிட்டு, […]

Read more

அகம் செய விரும்பு

அகம் செய விரும்பு,  நா.சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130. நூலின் தலைப்பே வித்தியாசமாக இருப்பதைப் போல நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் தலைப்புகளும் வித்தியாசமாக உள்ளன. நீங்கள் எந்த வருட மாடல்? இளிச்சவாயர்களாக இருப்போம்,  யார் உங்கள் பிக் பாஸ்,  அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே ஆகியவை சில உதாரணங்கள். இந்நூலில் அடங்கியுள்ள 16 கட்டுரைகளும், நமது வாழ்வில் உள்ள பல்வேறு பிரச்னைகளை எவ்வாறு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதாக இருக்கின்றன. அதே சமயம் அறிவுரை வழங்கும் தொனியில் இல்லாமல் […]

Read more

காவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள்

காவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள், அ.அமல்ராஜ் ஐ.பி.எஸ்., விஜயா பதிப்பகம், பக். 352, விலை 290ரூ. சவால்களும் பொறுப்புகளும் எல்லாத் துறைகளிலுமே உண்டு என்றாலும் காவல்துறையில் அவை மிகமிக அதிகம். நிர்வாகத்திற்ன் அதிகம் தேவைப்படும் அந்தத் துறையில் இருந்து கொண்டே வாழ்வின் மற்ற எல்லா நிலைகளையும் திறம்பட நிர்வகித்து வெற்றி காண்பதற்கான வழியினை எளிய முறையில் சொல்லும் நூல். புலம்பலோ மன அழுத்தமோ இல்லாமல், பணியிடம், குடும்பம், நட்பு வட்டாரம், வெளியிடம் என்று எல்லா இடங்களிலும் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட சின்னச் சின்ன […]

Read more
1 2 3 10