கடந்து போகிறவர்களின் திசைகள்

கடந்து போகிறவர்களின் திசைகள், ஆசு, இருவாட்சி, பக். 160, விலை 100ரூ. வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. வாழ்க்கையை உணர்ந்து, சமூக அக்கறையுடன் எழுதும் கதைகளில்தான் உயிர்ப்பு இருக்கும். இப்படிப்பட்ட கதைகளை எழுதுவதற்கு வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் தேவை. நூலாசிரியருக்கு அத்தகைய அனுபவங்கள் இருப்பதை இந்நூலில் உள்ள சிறுகதைகளைப் படிக்கும் வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள். பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இந்நூலில் உள்ள சிறுகதைகளில் மிகவும் இயல்பாக, உயிர்ப்புடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நாம் அன்றாடம் சந்திக்கும் பல மனிதர்களை […]

Read more

அம்மாக்கள் வாழ்ந்த தெரு

அம்மாக்கள் வாழந்த தெரு, ஆசு, இருவாட்சி, சென்னை 11, பக். 120, விலை 70ரூ. கிராமத்தின் வாழ்க்கையை மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு. அதிலும் குறிப்பாக கிராமத்துப் பெண்களின் வேதனைகள், துயரங்கள் பல கதைகளில் வெளிப்படுகின்றன. மழையில்லாமல் எங்கெங்கும் தீய்ந்து போன நிலங்கள். கிராமத்து மனிதர்களுக்கு உணவுக்கும் வழியின்றிப் போகிறது. பூமிக்கடியில் உள்ள கிழங்குகள், தானே முளைத்து வளர்ந்திருக்கும் பண்ணை கீரைகள், சோற்றுக்கற்றாழை எனக் கிடைப்பதையெல்லாம் அவர்கள் தேடிக் கண்டுபிடித்து உண்டு, உயிர் வாழ வேண்டிய நிலையை, ஒரு சிறுகதை துயரத்துடன் […]

Read more