கண்ணன் வருவான்
கண்ணன் வருவான், இந்திரா சவுந்தராஜன், திருமகள் நிலையம், விலை 250ரூ. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ராஜசூய யாகம் நடத்தும் வேளையில் அவர்களுக்கு கிருஷ்ணரின் பெருமைகளை விளக்கிக் கூறும் வகையில், கிருஷ்ணரின் வரலாறும் அவரது அவதார மகிமைகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. எழுதியவர் இந்திரா சவுந்தரராஜன் என்பதால் இந்த வரலாற்றை விறுவிறுப்பான நாவல் போல சுவைபடத் தந்துள்ளார். கிருஷ்ணரையும், துவாரகையையும் அழிக்க வந்த சால்வனின் சம்ஹாரம் வரை உள்ள வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ள இந்த நூலில், ஆன்மிகக் கருத்துக்களை ஆங்காங்கே அருமையான விளக்கங்களுடன் தந்து இருப்பது சிறப்பு. இந்தப் புத்தகத்தை […]
Read more