நீட்சி

நீட்சி, பாரவி, இயல் பதிப்பகம், பக். 208, விலை 95ரூ. பாரவி எழுதும் பல கதைகள், பரிசோதனை முயற்சிகள். முதல் கதையான வரப்பு திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பரிசு பெற்ற கதை. இது, வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை அறிமுகம் செய்கிறது. எருமை மாட்டைக் கட்டி இருக்கும் மூக்கணாங்கயிறு இறுகி, ரத்த காயம் உண்டாவதைச் சொல்லி உருகுற கதை நிறம். கண் மருத்துவப் பரிசோதனைக்கு வரும் கிராமத்து மனிதர்களின் அவலங்களைச் சொல்லும் இருட்டு, இறுதிச் சடங்கின்போது வாய்க்கரிசி போடுவதைச் சொல்லும் வாய்அரிசி முதலியன மிக யதார்த்தமானவை, […]

Read more

ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்

ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ், இலங்கை, ஞானம் பதிப்பகம்,3பி, 46வது ஒழுங்கை, கொழும்பு -06, விலை 1500ரூ. தமிழில் யுத்த இலக்கியத்திற்கு நீண்ட கால மரபு இருக்கிறது. புறநானூறு என்ற மாபெரும் இலக்கியத் தொகுப்பின் மூலம், யுத்தத்தை தமிழ்ச் சமூகம் எப்படி அணுகியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நவீன உலகின் தமிழர்கள் கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தங்கள் விடுதலைக்கான யுத்தம் ஒன்றை நடத்தினார்கள். குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட அந்த யுத்தத்தின் மாபெரும் தொகை நூல் ஒன்றினை இலங்கியிலிருந்து வெளிவரும் ஞானம் கலை […]

Read more