எல்லாமே இலவசம் இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி

எல்லாமே இலவசம், இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி, பாரதி சின்னசாமி,எழில்மதி பதிப்பகம், பக்.188, விலைரூ.120. சந்தைப் பொருளாதாரம் தற்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உலகச் சந்தையை தேசியச் சந்தைகளாக பிளவுபடுத்துகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் தனக்கிருந்த சந்தையை இழந்து சரிந்து விழத் தொடங்கியுள்ளன. சந்தையின் கட்டுடைவு சந்தையில்லாப் பொருளாதாரத்தை அதாவது இலவசப் பொருளாதாரத்தைத் தோற்றுவிப்பது தவிர்க்க முடியாதது ஆகும் என்ற அடிப்படையில் சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற்றாக நூலாசிரியர் இலவசப் பொருளாதாரத்தை முன்மொழிகிறார். ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கீரை, காய்கறிகள் விளைவித்து அந்த ஊரின் […]

Read more

மேலை அறிஞர் பார்வையில் தமிழ் நம் பார்வையில் அவர்கள்

மேலை அறிஞர் பார்வையில் தமிழ் நம் பார்வையில் அவர்கள் (பகுதி ஒன்று), தி. முருகானந்தம், தமிழ்ச்சோலை வெளியிடு, பக். 144, விலை 100ரூ. தமிழை ஆராய்ச்சி செய்த மேலைநாட்டு அறிஞர்கள் பலரையும் பற்றி எழுதத் துவங்கும் நூலாசிரியர், ஹார்டி (ஆர்டி) என்பவர் செய்த ஆய்வை குறித்து இந்நூலில் விரிவாக எழுதி உள்ளார். ஆர்டி ஜெர்மானியர். தமிழ் வழக்கறிஞராக திகழ்ந்தவர். சமயவியல் பேராசிரியர். கிருஷ்ண பக்தியை விரகபத்தி என்றும், கிருணவம் என்றும் குறிப்பிடுவது புதுமை. திருமாலை குறிக்கும் மாயோன், மாயவன் என்ற பெயர்கள் கருமை நிறத்தால் வந்த […]

Read more