ரகசியமாய் ஒரு ரகசியம்

ரகசியமாய் ஒரு ரகசியம், ஓஷோ, தமிழில் சிவாமி சியாமானந்த், கவிதா பதிப்பகம், சென்னை, பக். 992, விலை 600ரூ. ஓஷோ, தனது பக்தர்களிடம் ஆற்றிய உரைகயின் தொகுப்பாக வெளிவந்துள்ள மற்றும் ஒரு நூல். தியானம் செய்வது எப்படி? துறவறம் என்பது அவசியம்தானா? காமம் என்றால் என்ன? சுய இன்பம் அனுபவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதானா? என்பது போன்ற பலதரப்பட்ட விஷயங்களை அப்பட்டமாக அலசி இருக்கிறார். இடையிடையே ருசிகரமான சிறுகதைகள், புத்தர், போதிதர்மர், குரு லூத் சூ போன்றவர்களின் மேற்கோள்கள் ஆகியவற்றைக் கூறி படிக்க ஆவலைத் தூண்டுகிறார். ஓஷோவே […]

Read more

பாவலர் வரதராஜன் பாடல்கள்

பாவலர் வரதராஜன் பாடல்கள், கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 125ரூ. உரத்தகுரலில் உணர்ச்சி ததும்ப ஊர் ஊராய் மேடைதோறும் போய்ப் பாடிபாட்டுப் புரட்சி நடத்தியவர் பாவலர் என்று அழைக்கப்பட்ட வரதராஜன். இந்தப் பாவலரின் பாட்டு 1958ம் ஆண்டுவாக்கில் கேரளாவின் ஆட்சியை மாற்றிக் காட்டியது. அதுவரை எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை கேரளத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகு பார்த்தது. இதற்கான வெற்றி விழாவில் கலந்து கொள்ள வந்த கேரள முதல்மந்திரி ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு இவடெ பாவலர் […]

Read more

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 400, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-4.html வெங்காயத்தில் இருந்து வெடிகுண்டுவரை இந்த நூல் அனைத்து விஷயங்களையும் பேசும் எனக்குறிப்பிட்டிருப்பதுபோல், பல துறைகளைச் சேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பொதுக் கட்டுரைகள், தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், அரசியல் – சமூகம், நாடகம் என ஆசிரியர் சில தலைப்புகளில் கட்டுரைகளைப் பிரித்துத் தந்துள்ளார். […]

Read more
1 2