முகநூல் பதிவுகள்
முகநூல் பதிவுகள், பெ.சுபாசுசந்திரபோசு, சிந்தியன் பதிப்பகம், பக்.192; விலை ரூ.200. முகநூல் பதிவுகளாக இருந்தாலும் நூலாசிரியர் கூறியுள்ளபடி இந்நூல் தமிழ் மொழி முதல் பசிபிக் கடற்கரை வரை நம்மை அழைத்துச் செல்கிறது. அமெரிக்கப் பயண அனுபவங்கள், தமிழ் இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள், தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகங்கள், சிங்கப்பூர் பற்றிய செய்திகள், ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்கள் என நூலின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது. நாமறியாத பல தகவல்கள் நூல் முழுவதும் நிரம்பியிருக்கின்றன.தமிழ்நாட்டில் புனித மரமாகவும், வழிபாட்டு மரமாகவும் இருப்பது அரச […]
Read more