மின்னல் விளக்கு

மின்னல் விளக்கு (கட்டுரைகளின் தொகுப்பு), சொ. அருணன், கபிலன் பதிப்பகம், பக்.144,  விலை ரூ.100. மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, திருவள்ளுவர், ஆன்மிக – சமயப் பெரியோர்கள் என வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளிலிருந்து 14 கட்டுரைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அளித்திருப்பதற்கு ஏதாவது காரணம் இருந்திருந்தால் நூலாசிரியர் பதிவு செய்திருக்கலாம். புத்துப்பட்டு ஐயனார், புதுச்சேரி ஆரோவில் பற்றிய கட்டுரைகளில் அந்த இடங்களுக்குச் செல்ல யாரையும் வழிகேட்காமலேயே செல்லும் அளவுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.÷ நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் சில வரலாற்றுப் பதிவுகள் பழைய தகவல்களாக இருந்தாலும், அவற்றை […]

Read more

விடுதலை இயக்கத்தில் தமிழகம்

விடுதலை இயக்கத்தில் தமிழகம், டாக்டர் ஜி.பாலன், வானதி பதிப்பகம், பக். 624, விலை 300ரூ. விடுதலை இயக்கத்தில் பங்குபெற்ற வேலு நாச்சியார், கட்டபொம்மன், வ.உ.சி., திரு.வி.க., ம.பொ.சி., ஜீவானந்தம், கக்கன் போன்ற தமிழகத் தியாகச் செம்மல்களின் வரலாறுகளை தெளிவாகத் தொகுத்து, எழுதப்பெற்றுள்ள நூல். அண்ணல் காந்தியடிகள், தமிழகத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்த நிகழ்வுகள், அழகாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளன. தேசியக்கொடி பற்றிய கட்டுரையில், தேசியக்கொடியின் தோற்றம், அமைப்பு, அளவு, வரையறை, வண்ணங்கள், சக்கரச்சின்னம் முதலியவற்றை விளக்கி, சுதந்திரக்கொடியான மூவர்ணக்கொடியின் வரலாறு விளக்கப் பெற்றுள்ளது. தேசியக் கொடியைப் […]

Read more