கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள்

கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.674, விலை ரூ.680. சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கா.சு.பிள்ளை என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை. இவர் 1925 – இல் எழுதி வெளியிட்ட சைவ சித்தாந்த சந்தானாச்சாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும் என்ற நூலும், சைவ சித்தாந்த விளக்கம் எனும் நூலும், 1930 – இல் அவர் எழுதி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்ட தாயுமானவ சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலும், பட்டினத்தடிகளின் காலமும் வரலாறும் என்ற நூலும், 1932 – […]

Read more

வைகைக் கதைகள்

வைகைக் கதைகள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.604, விலைரூ.600; வைகை நதி ஓடிவரும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்றிதழ்கள், பேரிதழ்களில் எழுதிய எழுத்தாளர்களின் 56 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை முதல் நவீனகால எழுத்தாளர் லக்குமணசாமி எழுதிய சிறுகதைகள் வரை இடம்பெற்றுள்ளன. வைகை நதி நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கதைகள் தொகுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில கதைகளைத் தவிர, பல கதைகளில் தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை, பழக்க, வழக்கங்கள், பேசும் மொழி […]

Read more

முதல் விடுதலை வீரர் பூலித்தேவர்

முதல் விடுதலை வீரர் பூலித்தேவர், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம்,  காவ்யா, பக். 285, விலை ரூ.280. ‘ஆங்கிலேயரை மட்டுமல்லாது, நாயக்கர்களையும், நவாபுகளையும் எதிர்த்துப் போராடியவர் பூலித் தேவர்’. 1715 இல் பிறந்தவரான பூலித்தேவர் 1750 இல் இன்னிசு துரையுடன் போரிட்டார். அதற்குப் பின் 1767 இல் நடந்த போரில் அவர் மரணமடைவது வரை தொடர்ந்து அந்நிய ஆதிக்கங்களுக்கு எதிராகப் போரிட்டார். முதல் சுதந்திரப் போர் வீரராக அவர் திகழ்ந்தார். முதல் சுதந்திரப் போர் வீரர் பூலித்தேவரா, கட்டபொம்மனா என்ற கேள்விக்கு இந்நூல் விடையளிக்கிறது. இந்நூலில் துர்க்காதாஸ் […]

Read more

கவி கா.மு.ஷெரீப் கட்டுரைகள்

கவி கா.மு.ஷெரீப் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 911, விலை  ரூ.900. கவி.கா.மு.ஷெரீப் எழுத்தின் மீது கொண்ட தாகத்தால் “ஒளி’, “தமிழ் முழக்கம்’, “சாட்டை’, “திங்கள்’ ஆகிய இதழ்களை அவர் நடத்தினார். அவற்றில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். “தமிழரின் நெறி”, “ஒளி தலையங்கங்கள்’, “தமிழரசுக் கழகம் ஏன் வந்தது?’, “இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’, “இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?’, “பத்ர் போரின் விளைவுகள்’, “வள்ளல் சீதக்காதி வரலாறு’ ஆகியவற்றுடன் புதுவை வானொலியில் தொடர்ந்து இவர் நிகழ்த்திய சீறாப்புராணச் சொற்பொழிவுகளும் இதில் அடக்கம். […]

Read more

திராவிடத் தெய்வம் கண்ணகி

திராவிடத் தெய்வம் கண்ணகி, தொகுப்பாசிரியர் சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 926, விலை 700ரூ. ஒற்றைச் சிலம்பு கொண்டு மன்னனிடம் நீதி கேட்டு வாதாடி, மதுரையைப் பற்றி எரியச் செய்தாள் கண்ணகி. அவளது சிலம்பாலும், சினத்தாலும் உருவான சிலப்பதிகாரம் திராவிட இதிகாசமாகப் போற்றப்படுகிறது. கண்ணகி திராவிடத் தெய்வமாக வணங்கப்படுகிறாள். வீரபத்தினி, நடுகல், தாய்த் தெய்வம் போன்ற முன்னோர் வழிபாடுகள் திராவிட வழிபாடுகளாக விளங்கி வருகின்றன. கண்ணகி வழிபாடு திராவிட மக்களின் தாய்த் தெய்வ வழிபாட்டில் ஒன்றாகவும், ஆரம்பகாலம் தொட்டே வளர்ந்து வந்த […]

Read more