சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை, பருத்தியூர் கே. சந்தானராமன், அமராவதி பதிப்பகம், விலை 35ரூ. சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடராக இந்தியாவிற்கு வந்து சேவையாற்றிய அயர்லாந்து பெண்மணி மார்கரெட் இசபெல் நோபிள், நிவேதிதையாக மாறிய வரலாறு சுருக்கமாக எளிய நடையில் எழுதப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —– இளநீர்க்காரி, அ.ஏ. பார்த்திபன், கலாநிதி ஸ்ரீநிதி பதிப்பகம், விலை 240ரூ. கவிஞர் அ.ஏ.பார்த்திபன் எழுதிய நாவல் இளநீர்க்காரி. பூ ஒன்று புயலாக மாறிய கதையை, விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.

Read more

உலகம் சுற்றும் தமிழன்

உலகம் சுற்றும் தமிழன், ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. நவீன தமிழிலக்கியத்தில், பயண நூல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளரான ஏ.கே. செட்டியார், 1937 மற்றும் 1939ல் தாம் மேற்கொண்ட கப்பல் பயணங்கள் மூலம் கண்டுகளித்த ஜப்பான், அமெரிக்கா, அயர்லாந்து, பாரிஸ், டென்மார்க், ஜெர்மன், இத்தாலி, தென்னாப்ரிக்க நாடுகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதிய பயணக் குறிப்புகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. காந்தியடிகளுக்கு உலக நாடுகளில் உள்ள பெருமைகளை விளக்குகிறது முதல் கட்டுரை. பீனிக்ஸ் பூங்கா அயர்லாந்தில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலேயே மிகவும் […]

Read more