பரதநாட்டியம்

பரதநாட்டியம், வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்ளிகேஷன்ஸ், பக்.264, விலை 1330ரூ. பரதநாட்டியம், இந்திய நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு நடனம். அதிலும், இதில் தமிழகத்துக்கு பெரும் சிறப்பு உள்ளது. பரதநாட்டிய கலைஞர்களை அதிகளவில் தநதுள்ளது தமிழகம் தான். பரதநாட்டியம் என்றால் என்ன? அதில் காட்டப்படும் பாவங்கள், முத்திரைகள் என, பரதநாட்டியத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார். பரதநாட்டியம் கற்பவர்கள், கற்றவர்கள், இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். இந்த புத்தகம், அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். தமிழாக்கம் செய்து இதை வெளியிட்டால், […]

Read more

வாட் இஸ் பரதநாட்டியம்?

வாட் இஸ் பரதநாட்டியம்?(ஆங்கிலம்), வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்பிளகேஷன்ஸ், விலை 1330ரூ. தலைப்பு பரதநாட்டியம் கற்றுத்தரும் புத்தகம்போல் இருந்தாலும், பரத நாட்டியக் கலைஞரும் இசை ஆராய்ச்சியாளருமான வித்யா பவானி சுரேஷ், பரதக் கலையோடு வாழ்க்கையில் முன்னேறும் கலையையும் கற்றுத்தரும் வகையில் எழுதியிருக்கும் நூல் இது. “ஒருநாள் நான் லிஃப்டில் சென்றபோது, அவசர அவசரமாக தலைமுடியில் இருந்து ஈரம் சொட்ட ஓடிவந்தார் ஒரு பெண்மணி. வலது கையால் தலையைக் கோதி காய வைத்தபடியே, அரக்கப்பரக்க அலுவலகத்துக்குச் சென்ற அவரைப் பார்த்த எனக்கு சங்கடமாக இருந்தது. […]

Read more

50 எவர்கிரீன் ராகாஸ் ஆப் கர்நாடிக் மியூசிக்

50 எவர்கிரீன் ராகாஸ் ஆப் கர்நாடிக் மியூசிக் (ஆங்கிலம்), வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 1260ரூ. இசை ரசிகருக்கு மிகவும் பிடித்தது, கீர்த்தனைகளும், கிருதிகளுமா அல்லது கற்பனையாக ஊற்றெடுக்கும் ஆலாபனைகளும், நிரவல்களும், ஸ்வரங்களுமா? எடுத்த எடுப்பிலேயே, கீர்த்தனைகளும், கிருதிகளும் தான் எனப் போட்டுடைக்கிறார் வித்யா பவானி சுரேஷ். இவர், சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல, கர்நாடக இசையில் ஆழ்ந்த அறிவு உள்ளவர். அதையும் தாண்டி சிறந்த எழுத்தாளர் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். ராகத்தின் அமைப்பு, தாளத்தின் […]

Read more