அலாரத்தை எழுப்புங்கள்

அலாரத்தை எழுப்புங்கள், முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், கோவை, விலை 150ரூ.

செயல்களாலும், சிந்தனைகளாலும் ஒவ்வொரு நாளையும் சாதனை நாளாக மாற்றும் பொறுப்பும், சக்தியும் நம்மிடம்தான் உள்ளது என்பதை உணரும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் முனைவர் நா. சங்கரராமன் தெளிவாக கூறி உள்ளார். வெற்றி என்ற தாரக மந்திரத்தை மையமாக வைத்து வெற்றியாளர்களையும், அவர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்களையும் இந்த நூலில் பட்டியலிட்டு காட்டி இருக்கிறார். அலாரத்தை எழுப்புங்கள், முதல் தூக்கமும் தியானம்தான் உள்பட 20 கட்டுரைகளும் வெற்றிபெற துடிப்பவர்களுக்கு ஒரு ஏணியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.  

—-

பக்தி புத்தகங்கள், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.

பல்வேறு பக்தி புத்தகங்களை குறைந்த விலையில் அருணா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வினை தீர்க்கும் விநாயகர் தலங்கள், ஆசிரியர் சுப்புலட்சுமி சிவமதி, விலை 25ரூ. வளம் தரும் பெருமாள் தலங்கள், ஆசிரியர் விஜயவர்மன், விலை 40ரூ. ஸ்ரீ கருடபுராணம், ஆசிரியர் தமிழ்க் கூத்தன், விலை 45ரூ. ஸ்ரீ ராமானுஜர் மகிமை, ஆசிரியர் அரு.வி. சிவமதி, விலை 40ரூ. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *