தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார்
தோழர் ஈ.வெ.ரா. , நாகம்மையார், முனைவர் ந.க. மங்கள முருகேசன், தென்றல் பதிப்பகம், 13/3, பீட்டர் சாலை குடியிருப்பு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 204, விலை 150ரூ.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு பெண் இருக்கிறாள் என்னும் வாக்கிற்கு உயிரோட்டம் தரும் வகையில் ஈ.வெ.ரா. முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் விளங்கியவர் அவரது துணைவியார் ஈ.வெ.ரா., நாகம்மையார். நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாயிருந்த காலத்திலும், எனக்கு வாழ்வில், ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதரவாய் இருந்தார் என்பது, மறுக்க முடியாத காரியம் (பக். 23) என்று ஈ.வெ.ரா.வால் குடியரசு தலையங்கத்திலேயே எழுதப்பட்ட பெருமை வாய்ந்தவர் நாகம்மையார். நான் காங்கிரசில் இருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது, உலகம் அறிந்ததாகும் (பக். 48) என்றும் போற்றப்பட்டவர், இப்பெண்மணி. பெண்ணுரிமை, பொதுப்பணி என்றெல்லாம் பேசும், இன்றைய புதுமைப் பெண்கள் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய, ஒரு புரட்சிப் பெண்ணின் சுயமரியாதைச் சூடரின் வரலாறு அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தவறிப்போன வரலாற்றை, மீட்டுருவாக்கம் செய்துள்ள, ஆசிரியரின் பணி பாராட்டத்ததக்கது. -பின்னலூரான். நன்றி: தினமலர், 17/3/2013
—-
இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள், சி.எஸ். தேவ்நாத், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-702-2.html
டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வல்லுனர்கள் குழு 1948ம் ஆண்டு தயாரித்து பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல திருத்தங்களுடன் உருவான இந்திய அரசியல் அமைப்பு சாசனம், பெருமை மிக்கது. இதனை விரிவாகவும், சரளமான எளிய தமிழ் நடையுடனும், தனித்தனி தலைப்பகளில் அனைவரும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் கொடுத்த இருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். 2000ம் ஆண்டுவரை கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தங்களை இணைத்து இருப்பது கூடுதல் சிறப்பு. நமது உரிமைகள், கடமைகள் என்ன? நாம் எவ்வாறு ஆசைப்படுகிறோம்? எவ்வாறு ஆள வேண்டும்? என்பதற்கு நல்ல வழிகாட்டி. சாதாரண குடிமக்கள், அரசில் பணியாற்றுபவர்கள், அரசியல்வாதிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் இருக்க வேண்டிய ஆவண புத்தகமாக வெளிவந்து இருக்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 26/9/2012.