நரபட்சிணி
நரபட்சிணி, தமிழில்-முத்து மீனாட்சி, பஞ்சாபி மூலம்-நானாசிங், சாகித்ய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஷா சாலை, டில்லி 110001, பக். 449, விலை 235ரூ.
இந்திய தேச விடுதலைக்கு முன்பும் பின்புமாக, சுதந்திர இந்தியா உருவான காலத்தையொட்டிய சூழலை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட புதினம் இது. பெருமுதலாளியாக விரும்பும் நர மாமிச பட்சிணியின சிறு முதலாளி டாவர் சிங், மங்கையர் திலகமாக அவருக்கு வாய்த்த மனைவி, முற்போக்கு எண்ணம் கொண்ட, அவர்களது மகன், அவ்வப்போது நல்லவனாக மாறி, வாழ்க்கையில் தடுமாறும் தொழிலாளி சிங்காரசிங், அவனது நல்ல வாழ்க்கை துணைவி சுலோச்சனா, இந்த ஐந்து கதாபாத்திரங்களை கொண்டே சோஷலிச இந்தியாவையும், கம்யூனிச கருத்துகளையும் விரவி, பாரதி என்ற முற்போக்கு சிந்தனையாளன் மூலம், நூலாசிரியர் தன் எண்ண ஓட்டங்களை தத்துவங்களை, சித்தாந்தங்களை கையாண்டுள்ளார். பாலும் புத்தியும் கெட்டுப் போக நேரமாகாது(119) மனிதன் நல்லவனாக இருந்தாலும் முழுமையற்றவன்தான். கடைசி மூச்சுவரை அவன் தன் அனுபவத்திலிருந்து ஏதாவது கற்றுக்கொண்டுதான் இருக்கிறான் (183). தேசம் வெற்றியடையாமல் இருப்பதற்கு காரணமே இந்த வன்முறை கொள்கைதான் (189) எது நம் கட்டுப்பாட்டை பலவீனப்படுத்துகிறதோ, அதுதான் காமம் (357) இப்படி ஏராளமாக கூறலாம். படிப்பதற்கு விறுவிறுப்பாகவும், விஸ்தாரமான வாழ்க்கை அனுபவங்களையும உள்ளடக்கிய நயமான நாவல். -பின்னலூரான்.
—-
ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் தாண்டி, வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு, ராணி மைந்தன், பாரதி பதிப்பகம், 126/108, உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை 600017, பக். 614, விலை 349ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-175-1.html
டாக்டர் வா.செ. குழந்தைசாமி எந்த அளவுக்கு உயரிய எல்லைகளை தொட்டிருக்கிறார் என்பதை அறியக்கூடிய ஆவணமாக இந்த நூல் திகழ்கிறத. அதை நூலின் தலைப்பே எடுத்தியம்புகிறது. கலப்பை முதல் கணினி வரை என்ற நூலுக்கு அடுத்ததாக இந்த நூல் வெளிவந்துள்ளது சிந்தனைக்குரியது. பதினைந்து ஆண்டுகள் துணைவேந்தராகவும், கல்விசார் குழுமங்களில் இயக்குனராகவும், தலைவராகவும் இருந்து பணியாற்றியவர். அறிவியல் அறிஞரான இவர், மொழிப்பற்றிலும் மிகுந்த நாட்டங்கொண்டு தமிழ் வழி அறிவியல் பாடல் கற்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினராக இருந்தார். டாக்டர் வா.செ.கு. அவர்களின் வரலாற்றை மிகச் சிரத்தையோடு நூல்வடிவில் உருவாக்கிய ராணி மைந்தன் பதிவு செய்துள்ளதை பாராட்டவேண்டும். -ராமகுருநாதன்.
—-
திமிங்க வேட்டை, (மோபி டிக்)மூலம்-ஹெர்மன் மெல்வில், மோகன ரூபன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 215, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-5.html
பிரபல ஆங்கில நாவலின் சுருக்கம் தமிழில் மொழி மாற்றப்பட்டுள்ளது. -வி. பாலு. நன்றி: தினமலர், 13/10/2013.