வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்
வால்மார்ட்டை விரட்டி அடிப்போம், ஆல் நார்மன், தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 75ரூ. ஆன்லைனில் இந்தப் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-811-1.html
வால்மார்ட் எப்படி உலகளாவியதோ அதேபோல வால்மார்ட்டிற்கு எதிரான யுத்தமும் உலகளாவியது. வால்மார்ட் இந்தியாவிற்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று யூகங்கள் அடிப்படையில் இங்கே விவாதங்களும் அவற்றை மறுக்கும் கற்பனை நம்பிக்கைகளும் அளிக்கப்படும் சூழலில் இந்த நூல் அமெரிக்காவில் வால்மார்ட்டிற்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கிறது. ஆல் நார்மன் என்பவர் வால்மார்ட்டுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடினார். அவரது அனுபவங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வால்மார்ட்டின் வர்த்தக சூதாட்டத்தில் வாழ்விழந்த மக்கள், அதன் உழைப்புச் சுரண்டல்கள் என பல தளங்களில் இந்த நூல் புதிய உண்மைகளைச் சொல்கிறது. வால்மார்ட் என்பது சர்வதேச முதலாளித்துவத்தின் ஒரு கோரமுகம் என்பதற்கு இந்த நூல் சாட்சியமளிக்கிறது. நன்றி: குங்குமம், 11 மார்ச் 2013.
—–
திருப்பு முனைகள் சவால்களின் ஊடே ஒரு பயணம் (அக்னி சிறகுகள் – இரண்டாம் பாகம்), டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, பக்கங்கள் 240, விலை 120ரூ.
ஆன்லைனில் இந்தப் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-811-2.html
ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமையை, இந்தியா பெறக்காரணமான புகழ் பெற்ற விஞ்ஞானி.
கலாம் வாழ்வில் ஏழு திருப்பு முனைகள் அல்லது சவால்கள் உண்டு. கலாம், ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியதையும் சேர்த்துக்கொண்டால், அந்தத் திருப்புமுனைகள் எண்ணிக்கை எட்டாக உயர்கிறது. அந்தத் திருப்பு முனைகள் பற்றியெல்லாம் விரிவாக வர்ணிக்கிறார். நம் இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டக்கூடிய அருமையான புத்தகம். அனுபவப் பொக்கிஷம்.
எஸ். குரு.
நன்றி: தினமலர், 3, மார்ச் 2013.