வேதாளம் கேட்காத கேள்விகள்

வேதாளம் கேட்காத கேள்விகள், சாகித்ய அகாதெமி, சென்னை, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 85ரூ.

தேர்வறையில் மாணவனின் மனநிலையின் வழியே நாட்டு நடப்புகளை விவரிக்கும் புதுமையான நூல் வேதாளம் கேட்காத கேள்விகள். எழுத்தாளர் சுனில் மலையாளத்தில் எழுதிய விக்ரமாதித்யம் என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல். முனைவர் த.விஷ்ணுகுமாரன், நூலாசிரியரின் நோக்கம் சிதையாமல் அழகாக மொழி பெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 13/11/2013.  

—-

 

அறியப்படாத தமிழ் உலகம், பா. இளமாறன் சிவக்குமார் கோ. கணேஷ்

பல்வேறு ஆய்வுப் புலங்களில் பெரிதும் அறியப்படாத ஆளுமைகளையும், புத்தகங்களையும் சமூகத்திற்கு அறிவிக்கும் நோக்கோடு இந்த தொகுப்பு நூல் வெளிவந்திருக்கிறது. இதில் மரபிலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், மானுடவியல் முதல், 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கண்டன இலக்கியங்கள், இலக்கியவாதிகள், சமூகப் போராளிகள், தனி மனித ஆளுமைகள் வரை பலதரப்பு கட்டுரைகள் இடம் பெற்று உள்ளன. சொன்ன பெயர்களையே திருப்பிச் சொல்வதும், அறிந்த புத்தகங்களையே மேற்கோள் காட்டுவதுமே ஆய்வு என்றாகிவிட்ட நிலையில், இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும், அறியப்படாத தமிழ் உலகம் குறித்த அறிமுகமாகவும், அரிய ஆவணமாகவும், சமூகவியல் விமர்சனமாகவும், இதுவரை எழுதப்பட்த புதிய வரலாறாகவும் உள்ளன. இந்த சிறப்பு மலர் சென்னை, தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் கன்னிமாரா நூலகம் ஆகியவற்றில் வாசிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 10/11/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *