பாப்பாவுக்குப் பாட்டு

பாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், பக்.64, விலை 80ரூ. பாட்டுக்கு என்றாலே மகாகவி பாரதி தான் நினைவுக்கு வருவார். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் காலம் மறைந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில், குழந்தைகளுக்கென்றே விலங்குகளை நாயகனாக வைத்து பாடல்களை ஆசிரியர் தொகுத்து தந்துள்ளது பாராட்டிற்குரியது. உறவுகளை வளர்க்கும் வகையில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நுாலை வாங்கி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தால், அவர்களும் சிறப்பாக பாடுவர்; உச்சரிப்பும் சரியாக வரும் என்பதில் எள்ளளவும் […]

Read more

பேரா.நா.வா.வின் நான்கு கதைப் பாடல்கள்

பேரா.நா.வா.வின் நான்கு கதைப் பாடல்கள், பதிப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.545, விலை ரூ.500. பேராசிரியர் நா.வானமாமலை தொகுத்து, ஆய்வுரை எழுதி வெளியிட்ட காத்தவராயன் கதைப் பாடல், வள்ளியூர் வரலாறு (ஐவர் ராஜாக்கள் கதை), முத்துப்பட்டன் கதை, கான்சாகிபு சண்டை ஆகிய நான்கு கதைப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதைப் பாடல் குறித்தும் நா.வானமாமலை எழுதிய முன்னுரை(ஆய்வு)ரைகளும் இடம் பெற்றுள்ளன. 15 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த கதைப் பாடல்கள் […]

Read more

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், டி.எஸ்.புத்தக மாளிகை, பக். 236, விலை120ரூ. அவ்வையார் படைத்த, 109 வரிகளைக் கொண்ட ஆத்திசூடி, 91 வரிகளை கொண்ட கொன்றைவேந்தன், 30 வெண்பாக்களைக் கொண்ட மூதுரை, 40 வெண்பாக்களை கொண்ட நல்வழி. உலகநாதர் எழுதிய, 13 பாடல்களை கொண்ட உலகநீதி, அதிவீரராம பாண்டியன், ஒரு வரி, இரு வரி, மூன்று வரி பாடல்கள் என பாடிய, 82 பாடல்கள், சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய, 40 வெண்பாக்களைக் கொண்ட, ‘நன்னெறி’ ஆகிய அறநுால்களின் பாடல்களைத் தொகுத்து, அதற்கு கருத்தும், விளக்கமும் […]

Read more

கிள்ளை மொழி

கிள்ளை மொழி, கவிஞர் பெ. பெரியார் மன்னன், தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 95ரூ. கவிஞர் பெ. பெரியார் மன்னன் எழுதிய 79 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு. அணில், கரும்பு, முயல் போன்ற தலைப்புகளில் குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. “எங்க வீட்டு மீன் தொட்டி வந்து பாருங்கோ! கண்ணாடிப் பெட்டிக்குள்ளே கடலைப்பருங்கோ!” “ஒற்றுமையாய் வாழ்வதுவே ஒருமைப்பாடு! உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் திகழ்ந்திடும் நாடு!” என்பன போன்ற இனிய பாடல்கள். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.

Read more