முறையிட ஒரு கடவுள்

முறையிட ஒரு கடவுள், சர்வோத்தமன் சடகோபன், மணல்வீடு, பக்.160, விலை ரூ.150.   சர்வோத்தமன் சடகோபன் எழுதிய முறையிட ஒரு கடவுள் எனும் சிறுகதைத் தொகுப்பு அருமையான உரையாடலை நம்முள் நிகழ்த்துகிறது. வார்த்தைகளில் சிக்கல்களைக் கொடுக்காமல் கதைகளைப் பரிமாறுவதில் தன்னை சிறந்த எழுத்தாளராக நிலைநிறுத்தியுள்ளார் சடகோபன். மொத்தம் 13 கதைகள் இடம்பெற்றுள்ள இந்த சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் போது ஏற்படும் எதிர்பார்ப்பும், ஆவலும் அனைத்து கதைகளிலும் நம்மை விடாமல் பீடித்திருக்கின்றன. மணல்வீடு, காலச்சுவடு ஆகிய இலக்கிய இதழ்களில் தொடங்கி தமிழினி, தளம் உள்ளிட்ட இணைய […]

Read more

ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர்வெளியீடு, விலைரூ.190 படுகை முதலாகப் பதினொரு கதைகளின் தொகுப்பு நுால். புதுமாதிரியாக எழுதுவதற்கு எடுத்த முயற்சியாக அத்தனை கதைகளும் இடம்பெற்றுள்ளன. மொழிநடை நம்மை இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்திற்கு இழுத்துச் செல்வது போல் அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. பத்திரிகையின் தேவைக்காக எழுதப்பட்ட கதைகள் இவை இல்லை; என்றாலும் ஒரு வகையான தேடலை எதிர்பார்த்துஎழுதப்பட்டுள்ளது என்பதை இலக்கிய வாசகர்கள் எளிதில் உணர்ந்து கொள்வர். தமிழ்ச் சிறுகதையின் புதிய பரிமாணத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள தொகுப்பு நுால். – முகிலை ராசபாண்டியன் நன்றி: […]

Read more

சிறுவர் கதைப் பாடல்கள்

சிறுவர் கதைப் பாடல்கள், கிருங்கை சேதுபதி, சாகித்ய அகடமி, விலைரூ.230 ஆடிப் பாடும் சிறுவர்களுக்கு கதை கேட்பது கொண்டாட்டமாய் இருக்கும். அதுவும் பாடல் வழியே கதை சொல்லத் தொடங்கினால் சேர்ந்து பாடுவர். குழந்தைக் கவிஞர்களின், பல்சுவை கதைப் பாடல்கள் தீபாவளியின் தினுசு தினுசு பட்சணங்களாய் இந்த நுாலில் தரப்பட்டு உள்ளன. பல்சுவையுடன் சுவைத்து மகிழலாம். எலி, பூனை, சிங்கம், முயல், ஆமை, பாம்பு, யானை போன்ற விலங்குகளும், கொசு, கோழி, காக்கை, குருவி, மயில், மைனா போன்ற பறவைகளும், கடவுளும் கதைகளில் வந்து கவர்கின்றன. […]

Read more

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2, சுப்ரபாரதி மணியன், காவ்யா, விலைரூ.500 ஆசிரியர் எழுதிய, 250 கதைகளிலிருந்து, 61 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, சிறுகதை தொகுப்பாக வெளியிட்டுள்ளனர். தமிழன் ஒருவர், அன்னிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது, அவனுக்கு ஏற்படுகிற பிரச்னைகள், சுற்றுச்சூழல், வாழ்க்கை, அனுபவங்கள் மற்றும் மனித உரிமை பிரச்னைகள் ஆகியவற்றை இச்சிறுகதைகளில் பிரதிபலித்துள்ளார். வாழ்க்கை, எத்தனை வகையான மனிதர்களை தம்மோடு இணைத்து செல்கிறது என்பதை விரிவாகக் கூறுகிறது, இவரது சிறுகதைகள். நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

தொல்குடி

தொல்குடி, நாஞ்சில் நாடன், தமிழினி, விலைரூ.130 நுாலாசிரியரின் சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் அரங்கேறி, பலரது பாராட்டை பெற்று, தனி நுாலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில், 16 சிறுகதைகள் இடம்பெற்று உள்ளன. நுாலாசிரியர், இலக்கியத்தில் மிகுந்த புலமை பெற்றுள்ளவர் என்பது, ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது புலப்படுகிறது. இவரது சொல்லாடலும், எழுத்தாற்றலும் படிப்பவர்களை தம்முள் ஈர்த்துக் கொள்ளும் என்பது நிச்சயம் நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000028493_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

சங்கிலிப் பூதத்தான்

சங்கிலிப் பூதத்தான், நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகம், விலைரூ.145 மொத்தம், 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் இடம்பிடித்துள்ள கதைகள், ஆனந்த விகடன் இதழில் அவ்வப்போது வெளியாகி, வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றவை. ஒவ்வொரு சிறுகதையும், எளிய மக்களின் வாழ்க்கை போராட்டத்தை வலி(மை)யாக எடுத்துக் காட்டுகிறது. நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000026410_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மரக்குட்டி

மரக்குட்டி, கி.ரவிக்குமார், பாவைமதி வெளியீடு, விலைரூ.90 வாழ்வை விசாரித்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். 12 கதைகளைக் கொண்டுள்ளது. நவரசங்களை எழுத்தில் வடித்துள்ளார்.கதாபாத்திரங்களுடன், மரம், பறவைகள் குறித்தும் எழுதியுள்ளார். வியக்கும் வகையில் ஒப்பீடுகள் உள்ளன. கதைகளில் சமூக சிந்தனை பரவலாக உள்ளது. நன்றி: தினமலர், 17/5/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கறங்கு

கறங்கு, நாஞ்சில் நாடன், தமிழினி, விலைரூ.90. நுாலாசிரியர் எழுதிய பல்வேறு இதழ்களில் வெளியான, 12 சிறுகதைகளின் தொகுப்பு இது. வட்டார மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை படிக்கும் போது, அந்தந்த பகுதிக்கே சென்று வந்த உணர்வை தருகிறது. குறிப்பாக, கறங்கு என்ற சிறுகதை மலைக்க வைக்கிறது. நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், ஸ்டாலின், சாகித்ய அகடமி, விலைரூ.190. மெசபடோமிய நாகரிகத்தைக் காட்டும் இக்காவியம் அக்கேடிய மொழியில், கி.மு., 130ல் பெல் அஹிஉகூர் எழுதினார். கொடுங்கோல் அரசர் கில்கமெஷ் ஆட்சியில், மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். கில்கமெசிற்கு எதிராக தெய்வங்கள் என்கிடுவை உருவாக்குகின்றன. காட்டில் கொடிய விலங்குகளுடன் வாழும் என்கிடு, அவரை மாற்றுகிறார். முடிவில் கில்கமெஷ் மனம் மாறி, தெய்வங்களின் மறைபொருளை கூறுகிறார். யூப்ரடீஸ், டைகிரீஸ் ஆற்றங்கரைகளில், கி.மு., 2800க்கும் – கி.மு., 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் கிஷ் பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரைக் கதை இது. […]

Read more

மனம் கவரும் மகாபாரத கதைகள்

மனம் கவரும் மகாபாரத கதைகள், கமலா கந்தசாமி, சிந்தாசேகர், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 154, விலை 50ரூ. இந்தியாவுக்கும் புகழ் சேர்க்கும் இதிகாசம் மகாபாரதம். அது எழுதப்பட்ட விதம், அதில் உள்ள கதைகள், பாத்திரங்கள் சார்ந்த விளக்க கதைகள் என, 28 தலைப்புகளில் எழுதப்பட்டு உள்ளது. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக தயாரிக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினமலர், 15/3/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 71