மந்திரக் கிலுகிலுப்பை

மந்திரக் கிலுகிலுப்பை, சரிதா ஜோ, வெளியீடு: சுவடு பதிப்பகம், விலை – ரூ.120. மாயாஜாலக் கதைகள், விலங்குகளைப் பற்றிய கதைகள் என்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களைப் பற்றிய 14 கதைகளின் தொகுப்பு. ‘சர்க்கஸ் பார்க்கப் போன ரதி’, ‘யானையைத் தொட்டுப் பார்ப்போமா?’, ‘கட்டை விரல் அளவு குட்டி விலங்குகள்’, ‘மந்திரம் தீர்ந்து போச்சு’ என கதைகளின் தலைப்புகளே ஈர்க்கக்கூடியவையாக அமைந்துள்ளன. நன்றி: தமிழ் இந்து, 12/2/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

காகமும் நான்கு மீன்களும்

காகமும் நான்கு மீன்களும், ஆர்.வி.பதி, நிவேதிதா பதிப்பகம், விலை: ரூ.65. சிறுவர்களுக்கான பல நூல்களைப் படைத்திருக்கும் நூலாசிரியர் எழுதிய 10 சிறார் கதைகளின் தொகுப்பு இது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்கான நீதிநெறி போதனைகளை வழங்குகிறது. கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர் கி.சொக்கலிங்கம் வரைந்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 5/2/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பூனையும் யானையும்

பூனையும் யானையும், இரத்தின பாலச்சந்தர், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150 பூனை மற்றும் யானைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிறுகதை நுால். பல கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. விலங்குகள் பாசம், உழைப்பு, உதவி, நடிப்பு, நட்பு போன்றவை பற்றி அறியலாம். மனிதர்களை விட விலங்கு வாழ்க்கை சிறப்பாக உள்ளது என்பதை மெய்ப்பிக்கிறது. சிறியவர்களின் மனதை மகிழ்வித்து, உயிரினங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவரது முதல் நுால். – வி.விஷ்வா நன்றி: தினமலர், 9/1/22. இந்தப் புத்தகத்தை […]

Read more

பகல் கனவு

பகல் கனவு, லா.ச. ராமாமிருதம், பாலாஜி பதிப்பகம், விலைரூ.130. வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 16 கதைகள் உள்ளன. வண்ணங்கள் தடவிய சொற்களால் ஆனது. ஒவ்வொரு சொல்லுக்கும் பல்லாயிரம் பொருள் கொள்ளும் வகையில் திறன் உட்பட்டது. மனக் குகையில் எழும் ஒலியின் வடிவத்தை விவரிப்பது. வாழ்வை மிகவும் நுட்பமாக கடந்து சென்று, கற்பனையாக, அனுபவமாக வெளிப்படுத்துகின்றன கதைகள். அன்பு, ஆசை, பக்தி, பாசம் என கதைகளின் உள்ளீடு கிறங்க வைக்கின்றன. சொற்சேர்க்கைகள் கவிதையாக பொழிகின்றன. வண்ணமயமான விளக்குகள் மனதுக்குள் ஒளிர்வது போன்ற தோற்றத்தை […]

Read more

லவகுசா

லவகுசா, தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோயில்களின் அதிசயத்தக்க வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய செல்லப்பாவின் இரண்டாவது புத்தகம். கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுகுட்டிகளம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு. இக்கதையில் மணமுடிக்கும் போது சீதாவின் வயது, கானகம் சென்றபோது வயது, மகப்பேறின் போதுள்ள வயதை குறிப்பிடுவது அரிய தகவல்.பொறுமையின் சிகரமான சீதா ஏன் பொங்கி எழுந்தாள்… வானளாவ புகழ்ந்து ராமகதைகள் சொல்லிய அவளது […]

Read more

சிறகுகள் விரித்திடு

சிறகுகள் விரித்திடு (கவிதையும் கதையும்), அ.அமல்ராஜ், விஜயா பதிப்பகம், பக்.248, விலை ரூ.200. ஒருவரின் ஆளுமை, அறிவாற்றலை மேம்படுத்துவதில் கதைகளின் பங்களிப்பு இன்றியமையாதது. அதேபோன்று சமூகப் பொறுப்பு மிக்க கவிதைகள் படிப்பவரின் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எளிமையாகப் புனையப்பட்ட நூறு இனிய கதைகளையும், அதைச் சார்ந்த அர்த்தமுள்ள நூறு கதைகளையும் சுமந்து வந்திருக்கிறது “சிறகுகள் விரித்திடு’ நூல். இதில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதைகளும் மற்றும் கவிதைகளும் நம்மை புதிய பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றன. குறிப்பாக, “முடியும் என்றால் முடியும்’, […]

Read more

உலக நாட்டுப்புறக் கதைகள்

உலக நாட்டுப்புறக் கதைகள், ப்ரியா பாலு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.100. சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வியல் அர்த்தங்கள், மேம்பாடு, சூழ்நிலையை சரியான முறையில் கையாளுதல், அறிவை மேம்படுத்துதல், நற்குணங்களை வெளிப்படுத்துதல் மற்றும் நகைச்சுவை போன்ற எல்லா கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக விளங்குகிறது. ஏழை, எளிய மக்களின் இன்ப, துன்பங்களையும், அவர்கள் சந்திக்கிற பிரச்னைகளையும் பிரதிபலிக்கின்றன. குழந்தைகளுக்கு அறிவுரை சொல்ல உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. – வி.விஷ்வா நன்றி: தினமலர், 7/11/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

பறவைகள்

பறவைகள், மாலினி அரவிந்தன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150. பத்து சிறுகதைகள், இரண்டு சிறுவர்கதைகள், ஒன்பது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். வார, மாத இதழ்களில் வெளிவந்து பரிசு பெற்றுவை. மனிதர்களின் பிரச்னைகள், மன அவலங்கள், சமூக குறைபாடுகள், உறவு முரண்பாடுகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகின்றன; மனதை உருக்குகின்றன. கனடா நாட்டில் பல்வேறு துறைகளில் சாதிக்க வாய்ப்புகள் இருந்தும், தமிழ் பெண்கள் ஆர்வமில்லாமல் இருப்பது பற்றி கட்டுரை வழியாக ஆதங்கப்படுகிறார். பெண் மனம், அவர்கள் உலகம் எப்படியானது என்பதை கூறும் நுால். – […]

Read more

சிறிது சிறிதாய்… பெரிது பெரிதாய்…

சிறிது சிறிதாய்… பெரிது பெரிதாய்…, தஞ்சை எழிலன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.125. அறிவியல், ஆன்மிக செய்திகள் என திரட்டி நுால் வடிவமாக்கப்பட்டுள்ளது. நேர்மறை சிந்தனைகள் தான் வளத்தை தரும் என்பதை சொல்லும் குட்டிக் கதைகளும் உள்ளன. மக்களின் நேர்மையை சோதிக்க நினைத்த மன்னன் நடமாடும் தெருவில் கற்குவியலை போட்டான். வண்டி ஓட்டிகள் ஒதுங்கிச் சென்றனர். நடுரோட்டில் கற்குவியல் போட்டவனை வசைபாடி சென்றனர் சிலர். அதை அகற்ற யாரும் முயலவில்லை. நெல் மூட்டையை சுமந்து வந்த விவசாயி கற்குவியலை ஒதுக்கினார். விவசாயியின் நெல் மூட்டை பக்கத்தில் […]

Read more
1 2 3 4 5 80