ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம்,  டி.வி.ராதாகிருஷ்ணன், குவிகம் பதிப்பகம்,  பக்.214,  விலை ரூ.180. ஹைந்தவ பக்தி இலக்கியத்தில் மகாபுராணமான ஸ்ரீமத் பாகவதம் சிறப்பான இடத்தை வகிக்கிறது. பகவத்கீதைக்கு அடுத்தபடியாக அதிக உரைகள் இயற்றப்பட்டதும் பாகவதத்துக்குத்தான். சைதன்யர், வல்லபாசார்யரின் பக்தி மார்க்கத்தின் முக்கிய தூண்களில் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்றாகும். புராண இலக்கியத்தின் கீழ் அமைந்துள்ள இந்த நூல், பக்தி சம்பிரதாய பரவலுக்குப் பெரிதும் அடிப்படையாக அமைந்தது. இதனை இயற்றியவர் வியாசர் என்பது மரபு. நமது புராண இலக்கியங்களின் வடிவத்தையொட்டியே, கதை, கதைக்குள் கதை, கிளைக் கதை என விரிந்து […]

Read more

பஞ்ச தந்திரக் கதைகள்

பஞ்ச தந்திரக் கதைகள், தொகுப்பாசிரியர் முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பகம், பக். 520, விலை 380ரூ. பஞ்ச தந்திரக் கதைகள் கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் தெற்குப் பகுதியை அமரசக்தி என்ற அரசன் மிகச் சிறப்பாக ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தும், அவர்கள் எந்தத் திறமையும் அற்றவர்களாக இருந்தது அரசனுக்கு கவலையாக இருந்தது. அவர்களை 6-மாதத்தில் எல்லாத் திறமைகளும் கொண்டவர்களாக உருவாக்குவதாக, விஷ்ணுசர்மா என்ற அந்தண ஆசிரியர் பொறுப்பேற்கிறார். அதன்படி கல்வியறிவு அற்ற அவர்களை, […]

Read more

இந்திரநீலம்

இந்திரநீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 150ரூ. பெண்களின் காம வெளிப்பாடு, சங்க காலத்தில் இருந்து தொடரும் மரபுதான் என்றாலும், சங்கத்திற்குப் பின்னால் அதற்கு நீண்ட தொடர்ச்சி இல்லை என்பதையும்,காமம், நறுமணம் மிக்கப்பூவின் மலர்ச்சியைப் போல் அல்லாமல் கெடுபிடிகள் நிரம்பிய சடங்குகளாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதையும் நுணுக்கமான உளவியல் அடிப்படையில், 8 சிறுகதைகள் மூலம் மென்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். மகாபாரதத்தின் திரவுபதி, சிலப்பதிகாரக் கண்ணகி, காரைக்கால் அம்மையார் ஆன புனிதவதி, மாதவியின் மகள் மணிமேகலை போன்றவர்களைக் கதை மாந்தர்களாக ஆக்கி, அவர்களது உள்மனப் போராட்டத்தை […]

Read more

ஊதா நிறத் தீவு

ஊதா நிறத் தீவு, ராஜேஷ்குமார், ஸ்ரீபாரதி பப்ளிகேஷன்ஸ், விலை 115ரூ. உயிர்க்கொல்லி நோயான எயிட்சுக்கு கண்டுபிடித்த ரகசியமான மருந்தை மையமாக வைத்து எழுத்தாளர் தனக்கே உரித்தான பாணியில் திடீர் திருப்பங்களுடன் இந்த மர்மக் கதையைத் தந்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி,28/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள்

ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், விலைரூ.140. ஓஷோவின் 70 குறுங்கதைகள் வாயிலாக கருத்துகள் அழகிய வடிவில் நுாலாக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையைப் பற்றிய கண்ணோட்டத்தை மகாத்மா காந்தி அணுகிய முறை; ரோஜாச் செடியை முன்வைத்து உணர்த்தும் தடைகளுக்குப் பயப்படாதீர்கள் என்ற தலைப்பில் அமைந்த கருத்து; நல்ல மனம் மட்டுமே நாம் சென்று அடையக்கூடிய நல்ல பாதையைக் காட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மன்னனுக்கும், சோதிடருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்றவை சிறப்பாக உள்ளன. ஜமீன்தாருக்கு உழைப்பின் பெருமையை உணர்த்திய பட்டறைக்காரனின் […]

Read more

சிதைந்த கூடு

சிதைந்த கூடு, ரவீந்திரநாத் தாகூர், தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி, சாகித்திய அகாடமி, விலை 175ரூ. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 10 சிறுகதைகளும் பெண்களின் ஆழ் மன ஓட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் சரிவரப் புரிந்துகொள்ளப்படாததால், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் கொடுமைகளும் மனதைத் தொடும்வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தற்காலப் பெண்களின் சிந்தனைக்கு சமமாக 120 ஆண்டுகளுக்கு முன்பே ரவீந்திரநாத் தாகூர் படைத்த புதுமைப் பெண்களின் கதாபாத்திரங்கள் வியக்க வைக்கின்றன. வங்காள மொழியில் எழுதப்பட்ட கதைகளை தமிழில் பிசிறுதட்டாமல் மொழிமாற்றம் செய்து இருப்பதைப் பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி,18/4/21. இந்தப் […]

Read more

விஷக்கிணறு

விஷக்கிணறு, சுனில் கிருஷ்ணன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. புது அனுபவங்கள் ஒரு குறுநாவல், மூன்று சிறிய கதைகள், ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு விஷக்கிணறு. சுனில் கிருஷ்ணனின் படைப்புலகம் விரிந்த அனுபவங்களாலும் தூய்மையும் புதுமையும் கொண்ட மொழியாலும் ஆகி இருக்கிறது. சிக்கிலான அனுபவங்களையும் பூடகமான உணர்வுகளையும் கதைகள் ஆக்கி இருக்கிறார். இயல்வாகை என்ற கதையில் வரும் மருத்துவர் எதிர்கொள்ளும் சிக்கலும் அதிலிருந்து அவர் மீளும் கட்டமும் மிகப்புதியவை. இந்திரமதம் என்கிற கதையில் உலவும் அட்டைகளும் அவற்றைக் கையாளும் மாந்தர்களும் சாதாரணமாக நாம் எங்கும் […]

Read more

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள் (அராபியப் பெண்ணியச் சிறுகதைகள்), தொகுப்பும் மொழியாக்கமும்: ஜான்சி ராணி. வெளியீடு,  எதிர் வெளியீடு, விலை: ரூ.160. வாழ்க்கைக் கதைகள் மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்ரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகாலப் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள், புதிய தேவைகள், திருமணம் – தாய்மை, காதல், கல்வி, பணி, சுதந்திரம் என்று நவீன காலப் பெண்கள் அராபியச் சூழலில் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான சிக்கல்களையும் இவை நுணுக்கமாகப் பேசுகின்றன. நன்றி: […]

Read more

விரிசல்

விரிசல், கா.சிவா, வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.150 நினைவுகளில் ஊடாடும் நிலம் இது கா.சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. கிராமத்திலிருந்து இளம் வயதிலேயே நகரத்துக்குக் குடிபெயர்ந்த ஒருவர், தன் பதின்பருவ நினைவுகளுடன் உரையாடுவதற்கான மொழி சாத்தியப்படும் சூழலில் எழுதப்பட்ட கதைகளாக இவற்றைக் கூறலாம். சொந்த நிலத்திலும் புலம்பெயர்ந்த நிலத்திலும் தன் இருப்பு என்னவாக இருந்திருக்கிறது என்பதைப் பின்னோக்கிப் பார்த்திருக்கும் புனைவுகளாகவும் இதைக் கருத வாய்ப்புள்ளது. தன் சொந்த உறவுகளால் ஏமாற்றப்படுகிறான் வேலன்; நண்பனால் ஏமாற்றப்படுகிறான் பிரபா; வாடிக்கையாளரால் ஏமாற்றப்படுகிறான் சங்கர். ஏமாற்றுவதும் ஏமாறுவதும் வாழ்க்கையின் […]

Read more

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும், அந்தோன் சேகவ், தமிழில் ரா.கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 300ரூ. ரஷிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான அந்தோன் சேகவ் எழுதிய கதைகள் அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவற்றில் இருந்து 4 சிறுகதைகளும் 4 குறுநவால்களும் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்துக் கதைகளிலும், அந்தக் கால ரஷியாவின் சமூக கலாசாரம், மக்களின் போக்கு ஆகியவை யதார்த்தமான முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிகாரிகள் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பச்சோந்தி என்ற சிறுகதை அழகாகப் […]

Read more
1 2 3 4 5 6 80