ஒற்றைப் புளியமரம்

ஒற்றைப் புளியமரம், சுவாமிதோப்பு ஜி.லிங்கி, அனன்யா வெளியீடு, விலை 200ரூ. இந்த நூலின் ஆசிரியை, தனது வாழ்வைப் பாதித்த மற்றும் தான் பார்த்த நிகழ்வுகளையே அடிப்படையாக வைத்து 20 சிறுகதைகளைப் படைத்து இருக்கிறார். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கோணத்தில் பயணிப்பதால் ரசிக்க முடிகிறது. அனைத்துக் கதைகளிலும் நெல்லைத் தமிழ் மணம் கமழ்கிறது. நன்றி : தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள், கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 48ரூ. கிருபானந்த வாரியார் இந்த நூலில் 31 திருக்குறளைக் கூறி, அவற்றுக்கு பரிமேலழகர் உள்ளிட்ட சிலர் அளித்த விரிவுரைகளைத் தெரிவித்து, அந்தக் குறள்கள் வெளிப்படுத்தும் நீதிக்குத் தக்க சிறுகதைகளையும் சொல்லி இருக்கிறார். அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் அமைந்துள்ள இந்தக் கதைகள் அனைத்தும் படித்துப் பயன்பெறும் வகையில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 31/10/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000022890_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

வாட்டர் மெலன்

வாட்டர் மெலன், கனகராஜ் பாலசுப்பிரமணியம், தமிழில்:கே.நல்லதம்பி, வெளியீடு: யாவரும் பதிப்பகம், விலை: ரூ.180. புலப்பெயர்வின் தமிழ் வாழ்க்கை நவீன வாழ்வின் மிகப் பெரிய துயரங்களுள் ஒன்று அகதி வாழ்க்கை! 2020-ன் கணிப்பின்படி, தங்கள் நாடுகளை விட்டுப் பிற நாடுகளுக்குப் புகலிடம் தேடிச் சென்ற 28.10 கோடி அகதிகள் இருக்கிறார்கள். உலகின் மொத்த மக்கள்தொகையில் இது 3.6%. இதைத் தவிர, ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டிலேயே அகதிகள் காணப்படுகிறார்கள். இந்தியாவுக்குள் சுமார் 10 கோடி உள்நாட்டு அகதிகள் காணப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்தி பேசும், ஏழ்மை நிறைந்த […]

Read more

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக்கதைகள் -75

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக்கதைகள் -75, கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலை 230ரூ. பாட்டி தனது பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பாணியில், தமிழகத்தின் பாரம்பரியமான 75 குட்டிக் கதைகள் ஒவ்வொன்றும் முழுப்பக்கப் படங்களுடன் தரப்பட்டு இருககின்றன. வளரும் தலைமுறை குழந்தைகள் படித்துப் பயன்பெறவேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 13/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வால்மீகி அறம்

வால்மீகி அறம், நல்லி குப்புசாமி ரெட்டியார், பிரய்ன் பேங்க் பப்ளிகேஷன், விலை 395ரூ. வியாசர் அறம் என்ற நூல் மூலம் மகாபாரதத்தைத்தந்த தொழில் அதிபர் நல்லி குப்புசாமி ரெட்டியார். அவர் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் உள்ள கதைகள் கூறும் அறம் என்ன என்பதை இந்த நூலில் கொடுத்து இருக்கிறார். இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் ஓர் அறவுரையும், அதனைத் தொடர்ந்து ராமாயணக் கதைகளும் நீதிகளும் சொல்லும் அறமும், அந்த அறத்தை சமீபகால நடப்புகளுடன் ஒப்பிட்டு, அதன் மூலம் நாம் பெற வேண்டிய பாடம் […]

Read more

கஞ்சி

கஞ்சி (சிறுகதை தொகுப்பு),  ஞா.திரவியம், நர்மதா பதிப்பகம்,  பக்.264, விலை ரூ.225. குமரி மாவட்ட மக்களின் அரை நூற்றாண்டுக்கு முந்தைய வட்டார வழக்கு, கலாசாரம், வழிபாடு, பண்பாடு, வாழ்வியல் முறைகளைச் சித்திரிக்கும் 30 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். கேரள எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு முன்பொரு காலத்தில் கஞ்சி மிக முக்கிய உணவாக இருந்தது. தாங்கள் படிக்கும் சிதிலமடைந்த பள்ளியை மாணவர்களே புனரமைக்கின்றனர். மாணவர்களுக்கு அப்போது கஞ்சியை உணவாக வழங்கினர். நோன்பு கஞ்சி, பங்குனி உத்தரத் திருவிழாவின்போது பிரசாதமாக ஊற்றப்படும் கஞ்சி என கஞ்சி […]

Read more

துரிஞ்சிலாற்றின் பயணம்

துரிஞ்சிலாற்றின் பயணம், க.ஜெய்சங்கர், நறுமுகை, பக்.208, விலை ரூ.190. நதிக்கரை நாகரிகங்கள் என்றாலே நமக்கு காவிரி, கங்கை, யமுனை என்றுதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் உண்மையில் ஒவ்வொரு சிறிய நதிகளும் பெரும் கதைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை “துரிஞ்சிலாற்றின் பயணம்’ நூல் பறைசாற்றுகிறது. கவுத்தி வேடியப்பன் மலையில் தொடங்கி தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் துரிஞ்சில் ஆறு வெறும் 65 கிலோ மீட்டர்தான், ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் 55 ஊர்களில் – அங்குள்ள மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது. இதில், தமிழ் மக்களின் நீர் […]

Read more

ஓஷோ தத்துவ விளக்கக் கதைகள்

ஓஷோ தத்துவ விளக்கக் கதைகள், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.140. தத்துவ ஞானி ஓஷோவின் எழுபது தத்துவங்களும், அந்தத் தத்துவங்களை விளக்குவதுபோல் அமைந்த எழுபது சிறுகதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. புதிய முயற்சியாக இருக்கிறதே என்று நூலைப் படிக்கத் தொடங்கினால், டூ- இன்-ஒன் என்பதுபோல இரு நூல்களை வாசித்த அனுபவம் ஏற்படுகிறது. “நாட்டை ஆள்வதற்கு நேருவுக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று வல்லபபாய் படேல் காந்தியடிகளைப் பார்த்துக் கேட்க, “பதவி ஆசையே இல்லாதவன் நேரு ஒருவன்தான். அந்த ஒரு தகுதி போதும்’ […]

Read more

ஐந்தாம் வேதம்

ஐந்தாம் வேதம், என் மண் சார்ந்த காதலும் கலாச்சாரமும் (குறுங்காவியம்), மணவை பொன் மாணிக்கம்;, கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.150.   உலகில் மனிதர்கள் தோன்றிய நாளிலிருந்து காதலும் இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் காதலின் தன்மையும் காதலிப்பவர்களின் தன்மையும் மாறிக் கொண்டே வந்தாலும், காதல் எப்போதும் நிலைத்திருக்கிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள 12 கதைகளில் நம் அன்றாட வாழ்வில் பார்க்கிற பல காதலர்களைச் சந்திக்கலாம். நம்மோடு பழகுகிறவர்களை அவர்களில் உணரலாம். ஆனால் அவர்கள் நம்மிடம் அம்பிகாபதி – அமராவதி, பிருதிவிராஜ் – […]

Read more

இளையோரே, இனியவை கேளீர்!

இளையோரே, இனியவை கேளீர்! (நன்னெறிக் கதைகள்), பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.360. பொதுவாகவே பலருக்கு நல்ல விஷயங்களை நேரடியாக சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில் அடைத்தோ தருவதைப் போன்று, பல நல்ல கருத்துகளை குட்டிக் கதைகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த நுாலின் ஆசிரியர். அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்ததைப் போன்று, இந்த நுாலில் உள்ள இரு பக்க கதைகளில் ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். நுாலின் தலைப்பு, ‘இளையோரே […]

Read more
1 3 4 5 6 7 80