கிருமி

கிருமி, சி.சரவணகார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், விலை: ரூ.350 பெங்களூருவில் மென்பொருள் துறையில் பணியாற்றிவரும் எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயனின் மூன்றாம் சிறுகதைத் தொகுப்பு இது. தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளும் 2020-ன் பெரும் பகுதியை விழுங்கிய கரோனா ஊரடங்கின்போது எழுதப்பட்டவை. பெருந்தொற்றுக் காலத்தின் அச்சமும் அவநம்பிக்கையும் வீட்டில் அடைந்துகிடக்கும் மனித மனங்களில் உருவாகும் வெறுமையும் பெருந்தொற்று இல்லாத காலங்களிலும் தவிர்க்க முடியாத உணர்வுகளாக இருப்பதைப் பிரதிபலிக்கும் கதைகள் என்று இவற்றை வரையறுக்கலாம். பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகக் காமம் கலந்தோடுகிறது. ‘ஜலபிரவேசம்’ உள்ளிட்ட ஒருசில கதைகளில் காமம் குறித்த […]

Read more

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும், அந்தோன் சேகவ், தமிழில் ரா.கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 300ரூ.   ரஷிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான அந்தோன் சேகவ் எழுதிய கதைகள் அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவற்றில் இருந்து 4 சிறுகதைகளும் 4 குறுநாவல்களும் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்துக் கதைகளிலும், அந்த ககால ரஷியாவின் சமூக கலாசாரம், மக்களின் போக்கு ஆகியவை யதார்த்தமான முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிகாரிகள் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பச்சோந்தி என்ற சிறுகதை அழகாகப் […]

Read more

ஒற்றைப் புளியமரம்

ஒற்றைப் புளியமரம், சுவாமிதோப்பு ஜி.லிங்கி, அனன்யா வெளியீடு, விலை 200ரூ. இந்த நூலின் ஆசிரியை, தனது வாழ்வைப் பாதித்த மற்றும் தான் பார்த்த நிகழ்வுகளையே அடிப்படையாக வைத்து 20 சிறுகதைகளைப் படைத்து இருக்கிறார். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கோணத்தில் பயணிப்பதால் ரசிக்க முடிகிறது. அனைத்துக் கதைகளிலும் நெல்லைத் தமிழ் மணம் கமிழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

அந்தியில் மலர்ந்த மொட்டுகள், உமையவன், நிவேதிதா பதிப்பகம், விலைரூ.110. பள்ளி சிறுவர் – சிறுமியர் எழுதிய கதைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 15 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் உள்ளன. தமிழில் சிறந்த கூட்டு முயற்சியாக உள்ளது. குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் வகையிலான செயல். சிறுவர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளே கதைகளாக அமைந்துள்ளன. அவற்றுக்கு, படங்களும் வரைந்து சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் பல மிகவும் உயிரோட்டமாக உள்ளன. குழந்தைகளின் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்த தொகுப்பு. பள்ளியில் பல நிலையில் படிக்கும் சிறுவர் – சிறுமியர், அவர்களின் […]

Read more

கூடு

கூடு, கலைச்செல்வி,யாவரும் பதிப்பகம், விலை: ரூ.190. எந்த வாழ்க்கையையும் வாழப் பழகிக்கொள்ளும் பெண்களைத்தான் கலைச்செல்வி தம் புனைவுகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறார். இவருடைய சிறுகதைகள் மொழியின் மீது மௌனத்தை ஏற்றுபவை. சமூக அறத்தை மீறும் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாகவும் இவரது புனைவுகளை உள்வாங்கிக்கொள்ளலாம். எல்லாக் கதைகளின் மீதும் ஒரு மெல்லிய மூடுபனி படர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. தொடக்க காலக் கதைகளில் இந்தத் தன்மை இல்லை; ஒரு தெளிவான நிலமும் கதையும் இருந்தன. இந்தத் தொகுப்பில் தன்னையே அவர் கடந்திருக்கிறார். நன்றி: தமிழ் இந்து, 24/4/21 இந்தப் […]

Read more

பிச்சியின் பாடு

பிச்சியின் பாடு, பி.உஷாதேவி, அகநி வெளியீடு, விலை: ரூ.140 பி.உஷாதேவியின் தாய்மொழி மலையாளம். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சிறுகதைகளை எழுதிவருகிறார். ‘வீடு பள்ளத்தில் இருக்கிறது’, ‘ஊதா வண்ண இலைகளின் பாடல்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளிவந்துள்ள தொகுப்பு ‘பிச்சியின் பாடு’. வளர்ச்சியானது உறவுகளுக்குள் ஏற்படுத்தும் நுட்பமான விரிசலையும், அதை எதிர்கொள்ள முடியாத ஆண்களின் இயலாமையையும் முதல் தொகுப்பில் செறிவாக எழுதியிருந்தார். இந்த மூன்றாவது தொகுப்பு வருவதற்குள், கீழ்நடுத்தரக் குடும்பப் பெண்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக எழுதுவதில் பி.உஷாதேவியின் கை தேர்ந்திருக்கிறது. இந்தத் […]

Read more

மூங்கில்

மூங்கில், சுஷில் குமார், யாவரும் வெளியீடு,விலை: ரூ.200 சுஷில்குமாரின் ‘மூங்கில்’ சிறுகதைத் தொகுப்பானது பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்ச் சிறுகதை, வாழ்க்கையிலிருந்து விலகி நகர்ந்துவரும் இந்தச் சூழலில் இந்தக் கதைகள் வாசிப்புக்கு ஆசுவாசம் அளிக்கின்றன. இந்தத் தொகுப்பில் 12 சிறுகதைகளும் வெவ்வேறு விதமான பின்னணியைக் கொண்டவை. சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன், ஜெயமோகன் கதைகளில் சித்தரிக்கப்பட்ட நாகர்கோவில் வட்டாரப் பகுதிகளின் யதார்த்தமான புதிய வாழ்க்கையை இந்தக் கதைகளில் பார்க்க முடிகிறது. நாகர்கோவிலின் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறை, அவர்களது புழங்குமொழி எனத் தத்ரூபமான […]

Read more

விரிசல்

விரிசல், கா.சிவா, வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.150. இது கா.சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. கிராமத்திலிருந்து இளம் வயதிலேயே நகரத்துக்குக் குடிபெயர்ந்த ஒருவர், தன் பதின்பருவ நினைவுகளுடன் உரையாடுவதற்கான மொழி சாத்தியப்படும் சூழலில் எழுதப்பட்ட கதைகளாக இவற்றைக் கூறலாம். சொந்த நிலத்திலும் புலம்பெயர்ந்த நிலத்திலும் தன் இருப்பு என்னவாக இருந்திருக்கிறது என்பதைப் பின்னோக்கிப் பார்த்திருக்கும் புனைவுகளாகவும் இதைக் கருத வாய்ப்புள்ளது. தன் சொந்த உறவுகளால் ஏமாற்றப்படுகிறான் வேலன்; நண்பனால் ஏமாற்றப்படுகிறான் பிரபா; வாடிக்கையாளரால் ஏமாற்றப்படுகிறான் சங்கர். ஏமாற்றுவதும் ஏமாறுவதும் வாழ்க்கையின் ஒரு பகுதி. சங்கர் […]

Read more

காஷ்மீரியன்

காஷ்மீரியன், தேவராஜ் விட்டலன், பிறை பதிப்பகம், விலை: ரூ.110. இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் தேவராஜ் விட்டலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘காஷ்மீரியன்’. இந்தியாவின் வெவ்வேறு நிலப்பரப்புகளுக்குப் புலம்பெயரும் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார். இந்தப் பணியினூடாகப் பெற்ற அனுபவங்களும், சொந்த நிலத்தின் வேர் அறுந்த துயரங்களும் இந்தத் தொகுப்பில் புனைவுகளாக உருப்பெற்றுள்ளன. நகர வாழ்க்கை மீது தொடர்ந்து உருவாகிக்கொண்டே வரும் மிகை வெளிச்சத்துக்குப் பலியாகும் இடங்களையும், நகரம் தரும் நவீன வாழ்க்கையின் போதாமைகளில் வெளிப்படும் கிராமத்தின் உன்னதங்களையும் இவரது கதைகள் பேசுகின்றன. அடுத்த […]

Read more

தமிழருவி மணியன் சிறுகதைகள்

தமிழருவி மணியன் சிறுகதைகள், தமிழருவிமணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.144, விலை ரூ.130. நூலாசிரியரின் ஆறு சிறுகதைகள் அடங்கிய முதல் சிறுகதைத் தொகுப்பு. “ஒற்றைச் சிறகு’ சிறுகதையின் நாயகன் குமரேசன், சரியோ தவறோ கொடுப்பவனாகவே இறுதிவரை இருக்க வேண்டும் என்று பிடிவாதம் கொண்டவர். “தவறான வாழ்க்கைப் புரிதலோடு ஒடுங்கிப் போய்விட்டான்’ என்று அவருடைய மரணத்தின்போது வேதனைப்படுகிறார் அவருடைய ஆப்த நண்பர் ஆனந்தமூர்த்தி. கைம்மாறு கருதாத அன்பு இந்த உலகத்தில் உண்டா என்ற கேள்விக்கு விடை காண முயலும் படைப்பு. மதுவினால் குலைந்துபோகும் குடும்பத்தைக் கண்முன் நிறுத்துகிறது, […]

Read more
1 5 6 7 8 9 80