விந்தன் கதைகள்

விந்தன் கதைகள், தொகுப்பும் பதிப்பும் சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 1121; ரூ.1,100. அச்சுக் கோர்ப்புத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர், திரைக்கதை வசனகர்த்தா எனப் பன்முகத் திறமையாளராக தன்னை வெளிப்படுத்தியவர் விந்தன். 1939 முதல் சுமார் 25 வருடங்கள்அன்றைய பல்வேறு முன்னணி இதழ்களில் அவர் எழுதி வெளிவந்த சிறுகதைகள், குட்டிக்கதைகள், மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பே இந்நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் எளிய மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டவை. அவர்கள் அன்றாடம் சந்திக்கும் அடிப்படைப் […]

Read more

100 சிறுவர் கதைகள்

100 சிறுவர் கதைகள், வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.340 சிறுவர்களுக்கு நல்லறம் போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பண்பாட்டை உயர்த்தும் வண்ணம், 100 கதைகள் உள்ளன. புகழ் பெற்ற வானொலி நிகழ்ச்சிகளை வழங்கிய வானொலி அண்ணா எழுதியவை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. முதல் கதையே, ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற தலைப்பில் அமைந்து உள்ளது. அனைத்து கதைகளும் நேரடியாக கேட்பது போன்ற தொனியில் எழுதப்பட்டுள்ளன. மிகவும் எளிய மொழி நடையில் சொல்லப்பட்டுள்ளன. உழைப்பு, அறத்துடன் வாழ்தல் போன்றவற்றின் மேன்மையை பறை சாற்றுவதாக கதைகள் […]

Read more

தொல்குடித் தழும்புகள்

தொல்குடித் தழும்புகள், செம்பேன் உஸ்மான், தமிழில்: லிங்கராஜா வெங்கடேஷ், கலப்பை வெளியீடு, விலை: ரூ.180. ஆப்பிரிக்காவின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகப் பார்க்கப்படும் செம்பேன் உஸ்மானின் வாழ்க்கையே ஒரு நாவலைப் போல சுவாரயஸ்மானது. எழுத்தறிவற்ற தம் மக்களிடம் இலக்கியம் வழியாக நெருங்க முடியாததுதான் அவரை சினிமாவை நோக்கித் தள்ளியது. அது அவரை ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை எனும் அளவுக்கு இட்டுச்சென்றது. சினிமாவுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே அவருடைய மூன்று நாவல்களும், ‘தொல்குடித் தழும்புகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வந்திருந்தன. பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட இந்தச் சிறுகதைத் […]

Read more

உப்புச் சுமை

உப்புச் சுமை, ஐ.கிருத்திகா, தேநீர் பதிப்பகம், விலைரூ.160. செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கையுடன் துவங்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, விவசாயத் தொழில் செய்யும் ஏழைக் குடும்பத்துடன் நிறைவடைகிறது. செருப்பு தைக்கும் தொழிலாளி, தன் மகன் இதே தொழிலைச் செய்து சிரமப்படக் கூடாது என்று கவலைப்படுகிறான். விவசாயத் தொழில் செய்யும் வேலாயி, தன் மகன் வயலை விற்கப் போவதை நினைத்து உயிரை விடுகிறாள். தொழிலாளர் வாழ்க்கையை உற்றுப் பார்த்து, ஒவ்வொரு நிகழ்வையும் தன் எழுத்தில் நெசவு செய்திருக்கிறார் கிருத்திகா. உப்புச்சுமை என்ற கதை, உப்பு கரைவதைப்போல் […]

Read more

நாழிக் கூழும்… மொளகாயும்

நாழிக் கூழும்… மொளகாயும், சி.அன்னக்கொடி, கோதை பதிப்பகம்,  பக்.140, விலை ரூ.140. முழுக்க முழுக்க வட்டாரப் பேச்சு வழக்கிலேயே அமைந்துள்ள 23 சிறுகதைகளின் தொகுப்பு. நாகரிக வளர்ச்சியில்பேச்சு வழக்கிலிருந்து மறைந்து போன பல வார்த்தைகள் சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ளன. கிராமத்து வாழ்வியல், அதிலும் எளிய பாமர மக்களின் வாழ்வியல் என்றாலே சோகம் மட்டுமே நிரம்பியிருக்கும் என்ற வழக்கமான பாணி இத்தொகுப்பில் உள்ள கதைகளில் இல்லை. தொகுப்பு முழுக்க வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்துடன் அமைந்து நம்மை வசியப்படுத்துகின்றனர். கிராமியக் கதைகள் என்பதால் சொலவடைகளுக்குப் […]

Read more

உப்புச்சுமை

உப்புச்சுமை , ஐ.கிருத்திகா, தேநீர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.160.  கடந்த 20 ஆண்டுகளாக எழுதிவரும் நூலாசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். நாம் பலவிதமான மனிதர்களுடன் பழகுகிறோம். என்றாலும், பிறரின் வாழ்க்கையை நாம் நுட்பமாகக் கவனிப்பது இல்லை. ஆனால் நூலாசிரியர் மிக மிக நுட்பமாகக் கவனித்து, அவற்றின் அடிப்படையில் அற்புதமான சிறுகதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றில் 19 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். செருப்புத் தைப்பவரின் வாழ்க்கையைக் கூறும் செருப்புகளில் சிக்கிய வாழ்க்கை, திருந்தவே மாட்டான் என்று கருதப்பட்ட பிக்பாக்கெட் திருடன் ராசு, செய்யாத குற்றத்தைச் […]

Read more

தேவேந்திர குல வேளாளர் வரலாறு

தேவேந்திர குல வேளாளர் வரலாறு, தே.ஞானசேகரன், காவ்யா பதிப்பகம்,  பக்கம் 160,  விலை ரூ.170 . கடந்த 2000-ஆம் ஆண்டு மள்ளர் சமூக வரலாறு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்தநூல், தற்போது தேவேந்திரகுல வேளாளர் வரலாறு என்ற பெயரில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத நில உழவர் பெருமக்களான தேவேந்திர குல வேளாளர்களின் தோற்ற வரலாறு 12 கதைகள் மூலமும், தொல்காப்பியச் சான்று, இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகள், நாட்டுப்புற வழக்காறு, பள்ளு நூல்கள், சடங்கு பாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் தொகுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் […]

Read more

பிளிறல்

பிளிறல், சுப்ரபாரதி மணியன், கனவு, விலைரூ.100. எட்டு சிறுகதை தொகுப்பு இந்நுால். சில கதைகள், மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. பிரச்னைகள், பெண்களின் இயல்பான பண்புகள்,வெறுப்பு, வன்மம், சமகால பிரதிபலிப்பு, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரம் போன்றவற்றை, உளவியல் பார்வையோடு கதைகளில் விவரிக்கிறார் நுால் ஆசிரியர். ‘யானைகளை விரட்ட, தாரைத் தப்பட்டைக்காரர்களை கூப்பிட போயினர்; யாரும் அகப்படவில்லை; பெரிய பெரிய பட்டாசு வெடித்தனர். திருமணம் செய்தோம், விவாகரத்து பெற்றோம்; மீண்டும் ஒரு திருமண நாளில் சந்தித்தபோது, விவாகரத்து வலி தெரிந்தது’ போன்ற […]

Read more

கனவெனும் மாயசமவெளி

கனவெனும் மாயசமவெளி, ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.180. ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாயசமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை தான் செம த்ரில்லர் கதை. கனவுகளை களவாடும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிய கனவு… கனவுக்குள் கிரைம்… த்ரில்லர்… கில்லர்… நனவிலும் தொடரும் திகில் என பய பிராந்தியம் ஏற்படுத்துகிறது. மின்சார ஈல் மீன்களைப் பற்றிய கதை சற்றும் எதிர்பாராதது. அதன் மரபணுவை மனிதன் எப்படி பயன்படுத்தி ஜெயிக்கிறான் என்பது விறுவிறுப்பான கதை. நுாறாண்டு […]

Read more

காஷ்மீரியன்

காஷ்மீரியன், தேவராஜ் விட்டலன், பிறை பதிப்பகம், விலை: ரூ.110 இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் தேவராஜ் விட்டலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘காஷ்மீரியன்’. இந்தியாவின் வெவ்வேறு நிலப்பரப்புகளுக்குப் புலம்பெயரும் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார். இந்தப் பணியினூடாகப் பெற்ற அனுபவங்களும், சொந்த நிலத்தின் வேர் அறுந்த துயரங்களும் இந்தத் தொகுப்பில் புனைவுகளாக உருப்பெற்றுள்ளன. நகர வாழ்க்கை மீது தொடர்ந்து உருவாகிக்கொண்டே வரும் மிகை வெளிச்சத்துக்குப் பலியாகும் இடங்களையும், நகரம் தரும் நவீன வாழ்க்கையின் போதாமைகளில் வெளிப்படும் கிராமத்தின் உன்னதங்களையும் இவரது கதைகள் பேசுகின்றன. அடுத்த […]

Read more
1 6 7 8 9 10 80