ஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்

ஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள், கா.ஜோதி, கவிநிலா பதிப்பகம், விலைரூ.130. சிறு சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 100 கதைகள் உள்ளன. அன்றாடம் செய்திகளில் அடிபடும் சம்பவங்களை, அறத்துடன் கோர்த்து கதைகளாக்கியுள்ளார். மிகச் சாதாரணமான சம்பவங்கள் கூட கதைகளாகியுள்ளன. எச்சரிக்கும் விதமாகவும், அறிவுறுத்தும் வகையிலும், சேவைகளை மேன்மைப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளன. முன்னுதாரணமாக பல கதைகள் அமைந்து உள்ளன. நன்றி: தினமலர், 3/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

பால் டம்ளர்

பால் டம்ளர், ராஜி ரகுநாதன், கனவு, விலைரூ.150. தெலுங்கு மொழி பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில், 21 எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கதைகள் அனைத்தும் தெலுங்கு மொழி பத்திரிகைகளில் வெளியவந்து புகழ் பெற்றவை. தெலுங்கு மொழி பேசும் பகுதிகளின் தன்மையை பிரதிபலிக்கின்றன. புதுமையான திருப்பங்களைக் கொண்டுள்ளன.மிகவும் எளிய நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்வின் நுட்பங்களை உணர்த்தும் புனைவுகளின் தொகுப்பு நுால். நன்றி: தினமலர், 3/1/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030843_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

உவர்

உவர்,  இரா.சிவசித்து, மணல்வீடு, பக்.152, விலை ரூ.150;  மணல்வீடு, ஓலைச்சுவடி, கனலி ஆகிய இதழ்களில் வெளிவந்த 9 சிறுகதைகளின் தொகுப்பு. தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்போது, கிராம மக்களின் வாழ்க்கையை வாழ்ந்த அனுபவம் வாசகருக்குள் நிகழ்கிறது. பாத்திரங்களின் பேச்சு, கதையாசிரியரின் விவரிப்பு, நிகழும் சம்பவங்கள் அனைத்தும் கிராமத்து மண்ணில் வேர்விட்டு வளர்ந்தவை. உவர் சிறுகதையின் நீலமேகம் மாமா போன்ற மனிதர்களை இப்போதும் பார்க்க முடியும். சிறிய, பெரிய விஷயங்களுக்காக மனிதர்களுக்குள் நடைபெறும் அடிதடி சண்டைகள், வசவுகள் கூடவே அவற்றையெல்லாம் மீறி பொங்கி வழியும் அன்பு […]

Read more

உப்புச்சுமை

உப்புச்சுமை,  ஐ.கிருத்திகா,  தேநீர் பதிப்பகம்,  பக்.168, விலை ரூ.160. கடந்த 20 ஆண்டுகளாக எழுதிவரும் நூலாசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். நாம் பலவிதமான மனிதர்களுடன் பழகுகிறோம். என்றாலும், பிறரின் வாழ்க்கையை நாம் நுட்பமாகக் கவனிப்பது இல்லை. ஆனால் நூலாசிரியர் மிக மிக நுட்பமாகக் கவனித்து, அவற்றின் அடிப்படையில் அற்புதமான சிறுகதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றில் 19 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். செருப்புத் தைப்பவரின் வாழ்க்கையைக் கூறும் செருப்புகளில் சிக்கிய வாழ்க்கை,  திருந்தவே மாட்டான் என்று கருதப்பட்ட பிக்பாக்கெட் திருடன் ராசு, செய்யாத குற்றத்தைச் செய்ததாக […]

Read more

ஒரு மோகினியின் கதை

ஒரு மோகினியின் கதை, பூவை.எஸ்.ஆறுமுகம், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.110 பத்து சிறுகதைகளைக் கொண்ட நுால். கதைகள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்திச் செல்கின்றன. மரபு வழிக் கதை சொல்வனவாய் அமைந்துள்ளன. சந்தர்ப்பச் சூழ்நிலையில் பெண்கள் படும் அவலம், ஆணாதிக்கம் அவர்களை அடிமைப்படுத்த முயலுதல், பெண்களின் சமயோசிதம் முதலான போக்குகளில் கதை சொல்லப்படுகிறது. ஒரு மோகினியின் கதையில், தாசி அழகால் ஈர்க்கப்பட்டு வாழ்வில் குறுக்கிடும் இளைஞர்கள் பற்றியது. காதல் பொல்லாதது என்ற கதையில், மனைவியை மிகவும் நேசிக்கும் ஒருவன், இள வயது தோழியையும் விரும்புவதை சொல்கிறது. சில […]

Read more

புல்லாங்குழல்

புல்லாங்குழல், ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160 ஆசிரியர் ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் தொகுப்பின் கடைசி புத்தகம் புல்லாங்குழல். கற்பனைக்கு எட்டாத அதிசயங்களை அழகான கதையாக பிணைத்து உள்ளார். கதைக்கு கதை அறிவியல் வித்தியாசங்களை காட்டி அதிசயிக்கச் செய்யும் ஆசிரியரின் கைவண்ணத்துக்கு ஒரு கோப்பை தேநீர், காகித அம்பு கதைகளே சான்று. முனியம்மா ரயில் வண்டி நிலையம்… இனிமேல் நடக்கப் போகும் கூத்தின் ஆரம்ப கட்ட யதார்த்தம். ஆசிரியரின் கற்பனைக் கதைகளுக்கான அறிவியல் தேடல் மிக அதிகம் என்பதை அவரது […]

Read more

முறையிட ஒரு கடவுள்

முறையிட ஒரு கடவுள், சர்வோத்தமன் சடகோபன், மணல்வீடு, பக்.160, விலை ரூ.150.   சர்வோத்தமன் சடகோபன் எழுதிய முறையிட ஒரு கடவுள் எனும் சிறுகதைத் தொகுப்பு அருமையான உரையாடலை நம்முள் நிகழ்த்துகிறது. வார்த்தைகளில் சிக்கல்களைக் கொடுக்காமல் கதைகளைப் பரிமாறுவதில் தன்னை சிறந்த எழுத்தாளராக நிலைநிறுத்தியுள்ளார் சடகோபன். மொத்தம் 13 கதைகள் இடம்பெற்றுள்ள இந்த சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் போது ஏற்படும் எதிர்பார்ப்பும், ஆவலும் அனைத்து கதைகளிலும் நம்மை விடாமல் பீடித்திருக்கின்றன. மணல்வீடு, காலச்சுவடு ஆகிய இலக்கிய இதழ்களில் தொடங்கி தமிழினி, தளம் உள்ளிட்ட இணைய […]

Read more

தங்கையின் அழகிய சினேகிதி

தங்கையின் அழகிய சினேகிதி, குரு அரவிந்தன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.200 சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளில் இலங்கைத் தமிழ் எல்லா இடங்களிலும் இடம்பெற்று, புது அனுபவத்தை வழங்குகிறது. அண்ணனும், தங்கையும் எப்போதும் எலியும், பூனையுமாகத்தான் இருப்பர் என்பதைத் தெரிவிக்கும், ‘தங்கையின் அழகிய சினேகிதி’ என்னும் கதையில், காதலை மையமாக வைத்துக் குடும்பச் சூழலை பின்னிக் காட்டியிருக்கிறார். திருமண பந்தத்திற்கு முன் காதல் என்னும் ஈர்ப்பு, பலரது வாழ்க்கையில் புகுந்து வெளியேறியிருக்கும். அந்த ஈர்ப்பு, படுக்கை வரைக்கும்கூட இழுத்துச் சென்றிருக்கும். அந்தக் காதலில் பிரிவு […]

Read more

காடர்

காடர், வே. பிரசாந்த், எதிர் வெளியீடு. காட்டையும் காட்டில் வாழும் பழங்குடிகளையும் மையமாகக்கொண்டு ஒரு தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு வெளியாவது அபூர்வம். அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது காடர் சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லா கதைகளும் வெவ்வேறு கதைக்களங்களின் வாயிலாகக் காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டுகின்றன. நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030943_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர்வெளியீடு, விலைரூ.190 படுகை முதலாகப் பதினொரு கதைகளின் தொகுப்பு நுால். புதுமாதிரியாக எழுதுவதற்கு எடுத்த முயற்சியாக அத்தனை கதைகளும் இடம்பெற்றுள்ளன. மொழிநடை நம்மை இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்திற்கு இழுத்துச் செல்வது போல் அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. பத்திரிகையின் தேவைக்காக எழுதப்பட்ட கதைகள் இவை இல்லை; என்றாலும் ஒரு வகையான தேடலை எதிர்பார்த்துஎழுதப்பட்டுள்ளது என்பதை இலக்கிய வாசகர்கள் எளிதில் உணர்ந்து கொள்வர். தமிழ்ச் சிறுகதையின் புதிய பரிமாணத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள தொகுப்பு நுால். – முகிலை ராசபாண்டியன் நன்றி: […]

Read more
1 7 8 9 10 11 80