நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள், பாவெல் சக்தி, எதிர் வெளியீடு, விலை: ரூ.399 நீதித் துறையின் மீது ஒரு குறுக்கு விசாரணை எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்து எளிய மனிதர்களும்கூடத் தங்களது அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லிவிட்டுச் செல்லும் பொன்விதிகளில் ஒன்று: ‘போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், ஆஸ்பத்திரி மூன்றுக்கும் மனிதன் போகக் கூடாது’. எழுத்தாளரும் வழக்கறிஞருமான பாவெல் சக்தி, பின்நவீனத்துவ எழுத்துக்காரர்களை இந்த மூன்றின் பக்கமும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் என்று இந்தக் கதைத் தொகுப்பின் வழியே அழைப்புவிடுத்திருக்கிறார். தொழிலின் […]

Read more

இனியாவது நம்புங்களேன்!

இனியாவது நம்புங்களேன்!, அ.திருமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.200. அமெரிக்க குடியுரிமைக்காக தந்தையின் இறுதிச்சடங்கைப்புறக்கணிக்கும் மகனை, ‘டாலர் கனவு’ காண்பவனாகவும், விதவை யான பின் பழைய காதலனே ஏற்றுக்கொள்வதை, ‘புதிய வாழ்க்கையாகவும், பட்டா வாங்க படும்பாட்டை, ‘அடுத்த கலெக்டர் ரெடியா’ கதையிலும், ‘பிச்சைக்காரி’ கதையில் பெண்ணின் நேர்மையும் பதிவாகியுள்ளன.பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நுால். – பின்னலுாரான் நன்றி: தினமலர், 18/10/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75

உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75, கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலைரூ.230 குழந்தைகளுக்கான வீர, தீர கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். தமிழ் பேராய விருது பெற்றது. படுக்கையறையில் குழந்தைகளை குதுாகலமூட்ட, சொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாட்டி வடை சுட்ட கதையில் துவங்கி, அரசரும் பன்றியும் என்ற குறுங்கதையுடன் முடிகிறது. ஏற்கனவே கேட்ட கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் பேராய விருது பெற்று நுாலாக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 25/10/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000006539_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

புதிய ஆத்திசூடி கதைகள் 50

புதிய ஆத்திசூடி கதைகள் 50, வை.சங்கரலிங்கனார், நண்பர்கள் பதிப்பகம், விலைரூ.150 மகாகவி பாரதி எழுதிய புதிய ஆத்திசூடியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். 50 கதைகள் உள்ளன. புதிய ஆத்தி சூடி கவிதை வரிகளே தலைப்பாக்கப் பட்டுள்ளன.கதைகளின் வரும் கருத்துப்படி வாழ்ந்தால், மனித குலம் மகான் குலமாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படித்தால் தன்னம்பிக்கை ஏற்படும். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஒளி வித்தகர்கள்

ஒளி வித்தகர்கள், ஜா.தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.150 கதையை காட்சி வடிவில் கண்முன் நிறுத்துவதில் முக்கிய பங்காற்றுபவர் ஒளிப்பதிவாளர். இயற்கை வளங்கள், விலங்குகள், அவற்றின் உடல் அசைவுகள், குணாதிசயங்கள், மனிதர்களின் ஆசாபாசங்களை நுட்பமாக காட்டுவது, அந்த கலையின் பரிணாமம். ஒளிப்பதிவு கலை பற்றி பேசுகிறது. ‘மாஸ்டர்ஸ் ஆப் லைட்’ என்ற ஆங்கில நுாலின், தமிழாக்கம். கதை காட்சியை, ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்த ஒளியில் எடுத்தால் சிறப்பாக இருக்கும்; ஒளிப்பதிவாளருக்கு, ஓவியம் எப்படி உதவி செய்யும்; கேமரா நகர்வு எப்படி இருக்க […]

Read more

கல்யாணி

கல்யாணி, வல்லிக்கண்ணன், காவ்யா பதிப்பகம், ரூ.580. படிப்பதையும், எழுதுவதையுமே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்தவர், பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரது புனைவுகள் அற்புதமானவை; நுட்பமானவை. அந்த கால சமூகத்தை படம் பிடிப்பவை. அவை, சிறுகதைகளாகவும் மலர்ந்துள்ளன. அவற்றில் ஒரு பகுதியை தொகுத்துள்ள நுால். கடந்த, 1955 முதல், 1991 வரை எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளன. நெஞ்சுக்கு நீதியாக விளங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் பொக்கிஷமாக போற்ற வேண்டியது! – எஸ்.குரு. நன்றி:தினமலர், 26/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

ஈரம்

ஈரம் ; ஆசிரியர் : பூபதி பெரியசாமி, வெளியீடு: கவிஓவியா பதிப்பகம், விலை ரூ. 120/- வாழ்க்கை அனுபவங்களை கருவாக்கி, சிறுகதைகளாக புனைந்து தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம், 17 கதைகள் உள்ளன. பணம் தேடி, கணவன், மனைவி ஆளுக்கொரு திசையில் ஓட, வீடு அர்த்தமற்றதாகி, விடுமுறை தினத்தில் மட்டும், வேடந்தாங்கலாகும் சூழலை விளக்குகிறது, ‘அறுவை சிகிச்சை’ என்ற கதை.சமூக சேவை, சாமியாட்டம், அலைபேசி, முகநுால் என, பல கருக்கள் கதைகளில் வந்து கலகலப்பூட்டுகின்றன. – டி.எஸ்.ராயன். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கருப்பட்டி

கருப்பட்டி, ஆசிரியர் : மலர்வதி,  காலச்சுவடு பதிப்பகம், விலை 175/- பெண்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே வட்டாரம் சார்ந்து எழுதுகிறார்கள். அதில் மலர்வதியும் ஒருவர். நாஞ்சில்நாட்டு மொழியும், அப்பகுதி மக்களின் வாழ்க்கையும் இவரது புனைவுகளில் அப்பிக் கிடக்கின்றன. ‘காத்திருந்த கருப்பாயி’, ‘தூப்புக்காரி’, ‘காட்டுக்குட்டி’ ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். வாசகர்களின் பெருவாரியான கவனம் பெற்ற ‘தூப்புக்காரி’ நாவலுக்கு சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்தது. ‘கருப்பட்டி’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. கருப்பட்டி என்பது வெறும் இனிப்புப் பொருளன்று; பண்பாட்டின் குறியீடும்கூட.  அந்நில வாழ்க்கையின் ஒரு […]

Read more

திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள்

திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள்; ஆசிரியர் : எடப்பாடி அழகேசன், வெளியீடு: மணிமேகலை பிரசுரம், விலை 750 ரூ. உலக அற இலக்கியங்களுள் ஈர்ப்பு மிக்கது திருக்குறள். சாமானியர் வாழ்வில் நிகழும் நல்லவை, கேட்டவை அனைத்திற்கும் திருக்குறள் நெறிகளைப் பொருத்திப் பார்க்க முடியும். குறள் நெறிகள் எளிதாக மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் அதிகாரத்திற்கும் ஒரு கதையென, 133 சிறுகதைகளின் தொகுப்பாக வந்திருக்கும் நுால்.வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நீண்ட கதைகளாக்கித் திருக்குறள் அதிகாரங்களோடு பொருத்திக் கூற முனைந்திருக்கிறார். எளிய நடையில் […]

Read more

அயல் பெண்களின் கதைகள்

அயல் பெண்களின் கதைகள், தமிழில்: எம்.ரிஷான் ஷெரிப், வம்சி புக்ஸ், விலை: ரூ.160. சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் கதைகளை சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் எம்.ரிஷான் ஷெரிப். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல் இந்தக் கதைகளிலிருந்து வெளிப்படுவது குறித்து முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுதான் இந்தத் தொகுப்பைக் கொண்டுவருவதன் நோக்கமாகவும் இருக்க முடியும். இப்படியான தொகுப்பு சாத்தியமாவது இதுதான் முதன்முறை. நன்றி: தமிழ் இந்து, 15.02.2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030078_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more
1 9 10 11 12 13 80