பார்கின்சன்ஸ் நோய்
பார்கின்சன்ஸ் நோய், பேராசிரியர் டாக்டர் ம.தனராஜ், டாக்டர் எம்.டி. சாரிட்டபிள் டிரஸ்ட், பக்.136, விலை ரூ.500. நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன்ஸ் நோயைப் பற்றிய புரிதலை பாமரர்களுக்கும் ஏற்படுத்தும் வகையிலானதொரு நூல் இது. நரம்பியல் துறையின் முதன்மையான மருத்துவ நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் டாக்டர் ம.தனராஜ் எழுதியிருக்கும் நூல் இது என்பதே அதன் கூடுதல் சிறப்பு. மருத்துவத் துறையில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் பல பிரபல மருத்துவர்களின் ஆசானாக உள்ள தனராஜ், இந்தப் புத்தகத்தின் வாயிலாக எளிய வாசகர்களுக்கும் நடுக்குவாதம் குறித்து வகுப்பு எடுத்திருக்கிறார். […]
Read more