பயம்

பயம், ஹிப்னோ ராஜராஜன், ராரா புக்ஸ், விலைரூ.350 மனநல மருத்துவர் எழுதியுள்ள நுால். குற்றவாளியிடம் உண்மை கண்டறியும் சோதனையில் காவல் துறைக்கும் உதவுகிறார். திக்குவாய், பேச்சுத் தடைகளையும் நீக்குகிறார். இவர் அனுபவங்கள் நீண்டு நுாலாகி, வானில் பட்டமாக உயர்த்துகின்றன. பயம் எப்படி உடலையும், மனதையும் பாதிக்கிறது என்பதை 20 தலைப்புகளில் விளக்குகிறார். எண்ணங்களின் குவியல் மனம். அது ஆத்மாவில் அடங்கிவிட்டால் ஆன்ம சுகம் வந்துவிடுகிறது என்ற பகவான் ரமணரின் தவமொழியுடன் துவங்குகிறார். ஆழ்மனதில் பயத்தை அழித்துவிட்டால், நோயிலிருந்து விடுதலை பெற்றுவிடலாம். பயத்தைப் போக்கும் பயனுள்ள […]

Read more

ஊன் உடம்பு

ஊன் உடம்பு, மருத்துவர் A.B. ஃப்ரூக் அப்துல்லா, துருவம் வெளியீடு, விலை 120ரூ. கரோனா காலத்தில் பரவிய வதந்திகளைத் தன்னுடைய எளிமையான எழுத்தின் மூலம் ஃபரூக் அப்துல்லா எதிர்கொண்ட விதம் மக்களுக்கு நம்பிக்கை அளித்தது. அதன் நீட்சியாக அவர் எழுதியிருக்கும் இந்த நூலில், பொதுநல சிகிச்சைகள், சந்தேகங்கள் குறித்து சாமானியர்களுக்குப் புரியும் மொழியில் விளக்கியுள்ளார். புற்றுநோய், நீரிழிவு, பேலியோ சீருணவு, டயாலிசிஸ், பக்கவாதம், முடக்கு வாதம், சிறுநீர்ப் பாதைத் தொற்று உள்ளிட்ட நோய்கள் குறித்து அவர் அளித்துள்ள விளக்கங்கள் பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். […]

Read more

ஆட்டிசம் ஒரு பார்வை

ஆட்டிசம் ஒரு பார்வை, டாக்டர் ராதா பாலசந்தர், சென்டர் ஃபார் டெவலப்மென்ட் எஜுகேஷன் அண்ட் கம்யுனிகேஷன்,  பக்,160, விலை 150ரூ. ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்குத் தான் அளித்த சிகிச்சை அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆட்டிசத்துக்குத் தனியொரு நிபுணரின் வழிகாட்டல் மட்டும் போதாது. மனநல ஆலோசகர், நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர், பேச்சுப் பயிற்சி சிகிச்சையாளர் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழு மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். இசை, நடனம், யோகா போன்றவை ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் கவனக்குவிப்பை அதிகரிக்கும் என்பன […]

Read more

வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்

வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள், டாக்டர்.எம்.ஜி.அண்ணாதுரை, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. வாசனை தைலத்தால் செய்யப்படும் சிகிச்சை முறை பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நுால். இந்த சிகிச்சை முறை தோன்றியதன் வரலாற்று செய்திகள் முதல் இயலில் தொகுக்கப்பட்டு உள்ளன. அடுத்து வாசனை தைல தயாரிப்பு, ‘மசாஜ்’ செய்யும் முறைகள் என, 17 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. எந்தந்த இயற்கை பொருட்களில் இருந்து வாசனை தைலங்கள் தயாரிக்கப்படுகிறது என்பது உட்பட தகவல்கள் உள்ளன. மிக எளிய நடையில், அரோமா தெரபி பற்றிய அறிமுக நுால். – […]

Read more

மகாத்மாவும் மருத்துவமும்

மகாத்மாவும் மருத்துவமும், தமிழாக்கம்: டாக்டர் வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 95ரூ. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்’ (IJMR) எனும் மருத்துவ இதழ் காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ‘Gandhi and Health’ எனும் ஆங்கில நூலை வெளியிட்டது. அதன் தமிழாக்கம் இது. மருத்துவ அறிஞர்களும் காந்தியவாதிகளும் எழுதியிருக்கும் 20 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல் காந்திக்கும் மருத்துவத் துறைக்கும் இடையிலான உறவையும், அவருடைய மருத்துவப் பங்களிப்பையும் விவரிக்கிறது. வணிக நோக்கில் […]

Read more

இதம் தரும் இதயம்

இதம் தரும் இதயம், க.மகுடமுடி,  மகுடம் பதிப்பகம்,  பக்.254, விலை ரூ.350; சாமானிய வாசகர்களுக்கு புரியும் அடிப்படை மருத்துவத் தகவல்களோடு இந்நூல் நின்றுவிடாமல் அறுவை சிகிச்சைகளின் அதி நவீன தொழில்நுட்பம் வரை எளிமையான மொழியில் இந்த நூல் விளக்குகிறது. பொதுவாக இதுபோன்ற நூல்களில் மருத்துவக் கலைச் சொற்களும், தொழில்நுட்பரீதியிலான சொல்லாடல்களும் நிறைந்திருக்கும். ஆனால், இது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையாக எழுதப்பட்டு இருக்கிறது. இதயத்தின் உள்வடிவமைப்பு எப்படி உள்ளது, அது எவ்வாறு செயல்படுகிறது என்ற அரிச்சுவடியுடன் நூல் தொடங்குகிறது. அதன் பின்னர், நாம் அன்றாடம் […]

Read more

கீரைகள்

கீரைகள், மு.ந. புகழேந்தி, கோரல் பதிப்பகம், விலைரூ.70. கீரைத் தோட்டம் ஒரு மருந்து பெட்டி என, பிரபல எழுத்தாளர் டால்ஸ்டாய் கூற்றுக்கு ஏற்ப, கீரைகள் பற்றி விளக்கம் தரும் நுால். கீரை உணவின் சிறப்பு பற்றி முதல் கட்டுரை உணர்த்துகிறது. தொடர்ந்து அகத்தி கீரையில் துவங்கி, ஆரை, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை, வள்ளக்கீரை வரை பல வகை கீரைகளின் அடிப்படை தகவல்கள், சத்துகள், உண்ணும் முறை என விரிவாக தரப்பட்டுள்ளது. நலம் மிக்க வாழ்வுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கீரை உணவு பற்றி அடிப்படை அறிவை […]

Read more

நலம் நம் கையில் (இரண்டு பாகங்கள்)

நலம் நம் கையில் (இரண்டு பாகங்கள்), டாக்டர் கு.கணேசன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியீடு, விலை: ரூ. 380 (இரண்டு தொகுதிகளும் சேர்த்து)   மருத்துவ நூல்கள், சிறார் இலக்கியம் என்று 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர் மருத்துவர் கு.கணேசன். அது மட்டுமல்லாமல் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் மின்னிதழ்களிலும் சுற்றிச்சுழன்று தொடர்ந்து எழுதிவருபவர் அவர். எளிய தமிழில் மருத்துவத்தை மக்களுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்று நிரூபித்திருப்பவரும்கூட. அவரது எழுத்துகளாலே தமிழர்கள் பலருக்கும் குடும்ப மருத்துவராகத் திகழ்கிறார். அவரது மற்றுமொரு முக்கியமான […]

Read more

காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்கலாம்

காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்கலாம், டாக்டர்.எம்.ஜி.அண்ணாதுரை, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. ஹோமியோபதி மருத்துவத்துடன், அக்குபிரஷர் முறையும் கலந்து பலதரப்பட்ட நோய்களை காந்தம் கலந்து குணப்படுத்த முடியும் என கூறும் நுால். நோய்கள் விரைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை என்பதை கண்டுபிடித்த பின் தான், காந்த சக்தியாலும் நோய்களை சரி செய்யலாம் என்ற உறுதி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த புத்தகம் எழுத முடிந்தது என உறுதிப்படுத்தியுள்ளார். வாத பித்தம், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல், முகச் சுருக்கம், கருவளையம் போன்ற நோய்களை காந்த சிகிச்சையால் […]

Read more

முதியோர் நல மருத்துவம்

முதியோர் நல மருத்துவம், கேள்வி பதில்,டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, விலை: ரூ. 150. குழந்தைப் பருவத்தைவிட மென்மையானது முதுமைப் பருவம். வாழ்க்கையின் நினைவுகளை அசைபோட்டு மகிழ்வுடன் வாழ வேண்டிய பருவம் அது. ஆனால், அந்த மகிழ்ச்சி முதுமையில் பலருக்கும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. ஒருபுறம் முதுமையினால் ஏற்படும் உடல் உபாதைகள் / உடல்நலக் குறைபாடுகள். மறுபுறம் நெருங்கியவர்களின் இழப்பு, உறவினர்களின் புறக்கணிப்பு, குடும்பச்சூழல், சமூகச்சூழல் போன்றவற்றால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள். இவை முதியவர்களை மீள முடியாத, யாரிடமும் பகிர முடியாத […]

Read more
1 2 3 4 32