சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 400ரூ. கைத்தறி நெசவு தொடர்பான சொல் சாலாம்புரி என்பதைத் தலைப்பாகத் தாங்கி இருக்கும் இந்த நாவல். தமிழகத்தில் 1950 களில் நடைபெற்ற அரசியல், அப்போதைய நெசவாளர்களின் வாழ்க்கை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. திராவிடர் கழகத்தில் இருந்து விலகி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைக்கும் கதாநாயகன், அவரைச் சுற்றி நடைபெறும் நெசவாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், சாதி பிரச்சனை ஆகியவை கண் முன் படம் பிடித்துக் காட்டப்பட்டு இருக்கின்றன. சரளமான நடை, கதாபாத்திரங்களின் அப்பட்டமான பேச்சு, விறுவிறுப்பான […]

Read more

வீணையடி நீ எனக்கு

வீணையடி நீ எனக்கு, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 220, விலை 240ரூ. நேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என்று சிறுபிள்ளையாய் கேட்கும் மாணவியிடம், அன்னை ராஜராஜேஸ்வரி சொல்லும் எளிமையான விளக்கம், நம்மை உருகச் செய்துவிடும். அன்பு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். கர்மக்கணக்கும் அந்த அன்புக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவிக்கும் என்பதுதான் கதையோட்டத்தின் சிறப்பு. வழக்கம்போல விறுவிறுப்பான எழுத்தோட்டத்தாலும், எளிமையான கதையின் ஓட்டத்தாலும் கதையோடு பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் […]

Read more

கொச்சிக்கட VS கும்மிடிபூண்டி

கொச்சிக்கட VS கும்மிடிபூண்டி,  ஈழவாணி, பூவரசி வெளியீடு, விலை: ரூ.250. அதிகாரத்துக்காகவும் நிலத்துக்காகவும் இனத்துக்காகவும் எங்கே போர்கள் நடந்தாலும் அவை பெண்களின் உடல் மீதும் உள்ளத்தின் மீதுமே நடத்தப்படுகின்றன. எல்லாச் சபைகளிலும் பெண்ணே பகடைக்காயாக உருட்டப்படுகிறாள். அவிழ்த்து விடப்பட்ட கூந்தலை அள்ளி முடிக்க நம் பாஞ்சாலிகளுக்கு இன்னும் வாய்க்கவில்லை. விரித்த கூந்தலோடு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் பெண்ணாக கானவி என்பவள் இருந்தாலும் அதை அவள் எப்படி அணுகுகிறாள் என்பதை நாவல் வழியே உணர்த்துகிறார் ஈழவாணி. நன்றி: இந்து தமிழ், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030124.html இந்தப் […]

Read more

இச்சா

இச்சா, ஷோபா சக்தி, கருப்புப் பிரதிகள், விலை 270ரூ. துயரம், இழப்பு, மரணம், சித்ரவதைகள், ரத்தக் கோரங்கள் நிகழ்ந்த பிறகு சொல்லப்படுகையில் அவை எத்தனை கொடூரமானதாக இருந்திருந்தாலும் அவை கதையாய், காவியத்தின் சுவையாய் ஆகிவிடுகின்றன. காலத்தின் தொலைவில் நினைவெல்லாம் துய்க்கும் பொருளாகிறது. தீவிரமும் அதேவேளையில், சுவாரசியமும் பொதுத்தன்மையும் கொண்ட சர்வதேசக் கதையாக தமிழ் நவீன இலக்கியம் மாறுவதற்கு இனப் படுகொலையும் யுத்தமும் தேவையாக இருந்திருக்கிறது. அந்தக் கதையாடலின் நட்சத்திரமாக எழுந்த கதைசொல்லி ஷோபா சக்தி. தமிழ் நவீன இலக்கியத்தில் அவலத்தின் அத்தனை லட்சணங்களையும் கொண்டு […]

Read more

நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்

நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்,சேதுமணி மணியன், செண்பகம் வெளியீடு தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற இந்த நூலின் ஆசிரியர், தமிழ் வளர்ச்சி-பாதுகாப்பை மையமாகக்கொண்டு செயல்பட்டுவருபவர். நம் தாய்மொழியான தமிழ் ஏன் முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்தக் குறுநூல் நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கடாரம் வென்றான் காவியம்

கடாரம் வென்றான் காவியம், மேத்தா சரஸ்வதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 150ரூ. தமிழகத்தில் சோழப் பேரரசை வேரூன்றச் செய்த விஜயாலயச் சோழர், ஆதீத்த சோழர் ஆகியோரின் வீரத் தீரச் செயல்களையும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும் நாவல் வடிவத்தில் ருசிகரமாகத் தந்துஇருக்கிறார் ஆசிரியர். திருப்புறம்பயம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில், விஜயாலயச் சோழர் தனது கால்களின் பலத்தை இழந்த நிலையிலும் அடுத்தடுத்து வந்த வீரர்களின் தோள் மீது அமர்ந்தபடி போரிட்டு வெற்றி வாகை சூடிய வரலாற்றை சிறப்பாகப் படம் பிடித்துக்காட்டி இருக்கிறார். இந்த […]

Read more

ஹிப்பி

ஹிப்பி, அய்யனார் விஸ்வனாத், விலை 170ரூ. திருவண்ணாமலை பற்றி மூன்று பாகங்கள் எழுதவிருப்பதாக அறிவித்த அய்யனார் விஸ்வனாத், அதன் முதல் பாகத்தை வெளியிட்டிருக்கிறார். நாவலின் பெயர் ‘ஹிப்பி’. சமூகரீதியாக விளிம்பு நிலையில் இருக்கும் இளைஞனின் வாழ்க்கை அவனுடைய அம்மாவின் மரணத்துக்குப் பிறகு நிச்சயமின்மைக்குள் நுழைகிறது. வெளிநாட்டவர்களை ஈர்க்கும் திருவண்ணாமலையின் ரமணாசிரமத்துக்கு வரும் ஹிப்பி, குழுவுக்கு உதவியாளராகக் காட்டுக்குள் பயணிக்கிறான். அங்கே வேறொரு உலகத்தை எதிர்கொள்கிறான். அந்த விவரணைகளே இச்சிறுநாவலின் பெரும் பகுதியாக விரிகிறது. இளைஞனின் சமூகரீதியான நிச்சயமற்ற வாழ்க்கைக்கும், ஹிப்பிகளின் சுயதேர்வுரீதியான நிச்சயமற்ற வாழ்க்கைக்கும் […]

Read more

ராபின்சன் குருசோ

ராபின்சன் குருசோ, டேனியல் டெபோ, தமிழில் லதா வாசுதேவன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ. கடற்பயண ஆசையால் கப்பல் ஏறி பயணித்து, விபத்தில் சிக்கி ஆள் இல்லாத தீவில் தனி ஆளாக ஒதுங்கி, சவால்களைச் சந்தித்து வாழ்ந்த இளைஞன் ராபின்சன் குருசோவின் கதை. பல ஆண்டுகளாக ஏராளமான மக்களின் பெரு விருப்பமாக இருக்கிறது. இந்தக் கதை எளிமையான தமிழில் மொழிபெயர்த்து இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. நீரோட்டம் போன்ற நடை அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மண்ணும் மனிதரும்

மண்ணும் மனிதரும், டி.பி. சித்தலிங்கையா, சாகித்திய அகாடமி, பக். 648, விலை 485ரூ. கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதைதான் மண்ணும் மனிதரும். சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். மனித வாழ்க்கையில் இயற்கையின் பங்கு மற்றும் சுற்றுச்சூழலியல் பங்கு பற்றி சிந்தித்து, தொலைநோக்குப் பார்வையோடு முன் நகர்த்தும் முன்னோடி இவர். ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வாழ்ந்து வரும் வேளாண்மைக் குடும்பத்தில், நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. மகன் நிலத்தை விற்று நகரத்துக்குச் சென்று […]

Read more

அன்புள்ள ஏவாளுக்கு

அன்புள்ள ஏவாளுக்கு, ஆலிஸ் வாக்கர், தமிழில் ஷஹிதா, எதிர் வெளியீடு, விலை 350ரூ. எண்பதுகளில் இங்கே விளிம்புநிலை மனிதர்களும் அவர்களது வாழ்க்கையும் இலக்கியமாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் கதையை ‘தி கலர் பர்ப்பிள்’ (தமிழ் மொழிபெயர்ப்பின் தலைப்பு: ‘அன்புள்ள ஏவாளுக்கு’) என்ற பெயரில் நாவலாக்குகிறார் ஆலிஸ் வாக்கர். அந்நாவல் வெளியாகிய அடுத்த ஆண்டே ஆலிஸ் வாக்கருக்கு ‘புலிட்சர் விருது’ கிடைக்கிறது. ஆலிஸ் வாக்கர்தான் புலிட்சர் விருதுபெற்ற முதல் கறுப்பினப் பெண். நாவல் வெளியாகி அடுத்த மூன்று ஆண்டுகளில் ஸ்டீவன் […]

Read more
1 2 3 4