வலம்

வலம், விநாயக முருகன், உயிர்மெய் பதிப்பகம், பக். 336, விலை 310ரூ. பதினாறு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் மதரஸாபட்டினம் என்ற தற்போதைய சென்னையில் நடைபெற்ற நிகவுகளைப் படம் பிடித்து காட்டுகிறது இந்நாவல். பிரிட்டீஷ் அதிகார வர்க்கத்துடன் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஏற்பட்ட தவிப்பு, நம்பிக்கைக்கும், துரோகத்துக்கும் இடையே சிக்கி தவித்த சமூகங்களிடையே நடக்கும் முரண்பாடு ஆகியவற்றைக் கதைக் களமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. அன்றைய சென்னையை அவ்வளவு தெளிவாக எளிய நடையுடன் சித்தரித்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் மகன்களாக வெங்டாத்ரி […]

Read more

சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை, பருத்தியூர் கே. சந்தானராமன், அமராவதி பதிப்பகம், விலை 35ரூ. சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடராக இந்தியாவிற்கு வந்து சேவையாற்றிய அயர்லாந்து பெண்மணி மார்கரெட் இசபெல் நோபிள், நிவேதிதையாக மாறிய வரலாறு சுருக்கமாக எளிய நடையில் எழுதப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —– இளநீர்க்காரி, அ.ஏ. பார்த்திபன், கலாநிதி ஸ்ரீநிதி பதிப்பகம், விலை 240ரூ. கவிஞர் அ.ஏ.பார்த்திபன் எழுதிய நாவல் இளநீர்க்காரி. பூ ஒன்று புயலாக மாறிய கதையை, விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.

Read more

மரக்கலம்

மரக்கலம், ஸ்ரீமொழி வெங்கடேஷ், ஓவியம் காணிக்கைராஜ், ஸ்ரீமொழி பப்ளிகேஷன், விலை 200ரூ. வாஸ்கோடாகாமா கள்ளிக்கோட்டை துறை முகத்தில் கால் வைத்த நாளே, இந்திய மண்ணின் மீதான ஆதிக்கத்தின் துவக்கம் என தெளிவுபடுத்துகிறது இந்நூல். போர்ச்சுக்கீசியர்கள் இந்திய மண்ணை கைக்கொள்ள சுமார் 102 ஆண்டுகள் போராடி, கள்ளிக்கோட்டை மக்களை முழுமையாய் வெல்ல முடியாமல் கோவாவை தங்கள் ஆதிக்கத்திற்கு நிலை நிறுத்திக்கொண்டு நாடு திரும்பியவர்கள். இவர்களுக்கு பின்புதான் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்க வரலாற்றை துவக்குகிறது. அந்நியர்களுக்கு எதிரான கள்ளிக்கோட்டை மன்னர் மானவர்மர் சாமுத்திரியின் வலுவான எதிர்ப்பின் கூர்மை […]

Read more
1 3 4 5