எச் 2 ஓ

எச் 2 ஓ, ஜோதி மகாதேவன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெ, பக். 68, விலை 50ரூ. ‘எச் 2 ஓ’ – இந்த தலைப்பு ஏற்படுத்திய ஆர்வத்தில் புத்தகத்தை திறந்து முதல் வரி வாசித்தால், ‘ஓசோன் பரவிய கிழக்கு கடற்கரை சாலை காற்று…’ என, ஆரம்பிக்கிறது நாவல். மிக நேர்த்தியான எழுத்து நடையால், சினிமா பார்ப்பது போல் கதைக்களம் காட்சிகளாய் விரிகிறது. சென்னையில் வேலை பார்க்கும் மிடில் கிளாஸ் இளைஞனுக்கும், ஹை கிளாஸ் அப்பார்டமென்ட்டில் வாழும், ஒரு பேரழகிக்கும் இடையேயான சுவாரசிய […]

Read more

எரிநட்சத்திரம்

எரிநட்சத்திரம், ரா. கிருஷ்ணமூர்த்தி, வசந்தா பதிப்பகம், விலை1 25ரூ. ஒரு சினிமா நடிகையின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் ரா. கிருஷ்ணமூர்த்தி. உள்ளத்தைத் தொடும் உணர்ச்சிமயமான கதை. நன்றி: தினத்தந்தி, 16/8/2017

Read more

உஷாதீபன் குறுநாவல்கள்

உஷாதீபன் குறுநாவல்கள், நிவேதிதா பதிப்பகம், விலை 250ரூ. சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதைகளை எழுதுவதில் தேர்ந்த எழுத்தாளர் உஷா தீபனின் 4 குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பிது. 9 சிறுகதை நூல்கள், 3 குறுநாவல்கள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பென தொடர்சசியாக எழுதி வருபவர் இவர். இந்த குறுநாவல்களில் குடும்ப உறவுகளில் எழும் சிக்கல்களையும், அதனால் உண்டாகும் மனக் கசப்புகளையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். உறவு சொல்ல ஒருவன், என்னவளே, அடி என்னவளே… ஆனந்தக் கண்ணீர், எல்லாம் உனக்காக என திரைப்பட பாணியில் வைக்கப்பட்ட […]

Read more

தக்கர் கொள்ளையர்கள்

தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. ‘ஒரே வருடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள்… காற்றில் கரைந்ததுபோல் மாயமானார்கள்….!’ தொடக்க வரிகளே நடுங்க வைக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில் தக்கர் கொள்ளையர்கள் கொலைவெறியுடன் நடத்திய கொடூர சம்பவங்களின் வரலாறினை அலைந்து திரிந்து சேகரித்து திகில் படங்களுக்கு சற்றும் குறையாத படபடப்பு படிப்பவர்களுக்கு ஏற்படும் வகையிலும் சுவாரசியமாகவும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: குமுதம், 12/7/2017.

Read more

கொ.மா.கோதண்டம் நாவல்கள்

கொ.மா.கோதண்டம் நாவல்கள் , கொ.மா. கோதண்டம், காவ்யா வெளியீடு,  பக்.620. விலை ரூ.600. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நூலாசிரியர் எழுதிய மூன்று நாவல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. படிக்க எடுத்தால் பாத்திரங்களோடு ஒன்றிப் போகும் அளவுக்கு இயல்பான சித்திரிப்புகளுடன் அமைந்திருப்பது இத் தொகுப்பில் உள்ள நாவல்களின் பலம். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை கசப்பானது. அடிப்படை வசதிகள் என்றால் என்னவென்றே அறியாத அந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை காதல் உணர்வுகளுடன் இணைத்துத் தருவது ‘ஏலச் சிகரம் 39‘. இரண்டாம் நாவலான ‘குறிஞ்சாம் பூ […]

Read more

ராமாமிர்தம்

ராமாமிர்தம், லா.ச.ரா. நாவல்கள், காவ்யா, பக். 720, விலை 700ரூ. தமிழ் இலக்கிய முன்னோடிகளில் முக்கியமான ஒருவர் லா.ச.ராமாமிர்தம். நம்மை உணர்ச்சிமயமாக்கி, ஒரு மாய உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் அவர் எழுத்துக்களுக்கு உண்டு. அவருடைய படைப்புகளை தொகுத்து, “ராமாமிர்தம்” என்ற தலைப்பில் பெருநூல்களாக வெளியிடுகிறது, “ராமாமிர்தம் 1” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதில் “புத்ர”, “அபிதா”, கல்சிரிக்கிறது”, “கேரளத்தில் எங்கோ”, “கழுகு”, “பிராயச்சித்தம்” ஆகிய 6 நாவல்கள் அடங்கியுள்ளன. ராமாமிர்தத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் அன்னைக்கு அணிவிக்கப்பட்ட […]

Read more

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள், சல்மான் ருஷ்தீ, தமிழில் சா.தேவதாஸ், எதிர் வெளியீடு, விலை 320ரூ. சல்மான் ருஷ்தீக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் தீர்க்கமான நாவல்களுக்காக மேலான கவனம் பெற்றிருப்பவர். அவரது இந்த புத்தகம் அதிக நுட்பம் நிரம்பியது. அணுக்கமான வாசிப்பு இருந்தால் இதன் மைய இழைகளை சுலபமாக தொட்டுவிடலாம். அவரது உரைநடை குறித்தும் அதன் செதுக்கிய தன்மை குறித்தும் இலக்கிய உலகில் மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறார்கள். பெரிதாக உரையாடல்கள் ஏதும் இல்லை. படிக்கும்போதே சில குறிப்புகள் கிடைக்கின்றன. சில ஒளித்து […]

Read more

வீரம் விளைந்தது

வீரம் விளைந்தது, தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், கார்முகில், விலை 250ரூ. ஒரே நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பலர் உண்டு. அப்படிப்பட்ட நாவல் ‘வீரம் விளைந்தது’. உலகெங்கும் உள்ள போராளிக் குழுக்களுக்குக் காலம்காலமாக உத்வேகம் அளித்துவரும் நாவல்களில் இதுவும் ஒன்று. ‘How the steel was Tempered’ என்று ஆங்கிலத்தில் வெளியான இந்த நாவல், ஒரு சுயசரிதை நாவல். இதை எழுதியவர் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படை வீரர்களில் ஒருவராக ரஷ்ணப் புரட்சியில் பங்கேற்றுப் போரிட்ட நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி. இந்த நாவலில் வரும் பாவெல் […]

Read more

வான் தொட்டில்

வான் தொட்டில், முனைவர் ஆ. மணிவண்ணன், வானதி பதிப்பகம், பக். 192, விலை 125ரூ. தன்னை உணர்ந்தவன் ஞானி. சமுதாயத்தை உணர்ந்தவன் மனிதன். இந்த இரண்டையும் உணர்ந்தவன் கலைஞன் என்ற கவிதையாய் கொட்டுகிறது இந்நுல். நன்றி: தினமலர், 06/11/2016.   —-   வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. ஆசிரியர் தன் முதல் நாவலில் அனைத்து வகை சுவைகளையும் கூட்டி எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

இடக்கை

இடக்கை, எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், பக். 358, விலை 375ரூ. பேரரசர் அவுரங்கசீப் மரணம் அடைவதை சொல்லி, இந்த நாவல் துவங்குகிறது. டில்லி அரியணை ரத்தக்கறை படிந்தது. எளிய மனிதன் ஒருவனும் அதில் அமர்ந்ததேயில்லை. இந்த நாவல் வரலாற்றில் வாழ்ந்த சாமான்ய மனிதர்களின் கதையை சொல்ல முயல்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் சிறையில் அடைக்க இடம் இல்லாமல் போய் விட்டதால், அவர்களுக்கென ஒரு சிறு நகரை உருவாக்கி இருந்தனர். அந்த நகரை காலா என அழைத்தனர். சில குற்றவாளிகள் […]

Read more
1 2 3 4 5