மெய்ப்பொருள் காண்போம்

மெய்ப்பொருள் காண்போம், மேனிலை அடைவோம், சிங்கப்பூர் சித்தார்த்தன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தில் பல பொறுப்புகளை வகித்தவர் இந்நூலாசிரியர். இவர் தமிழ்க் கல்வி குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளின் மூலமும், படைப்பு இலக்கியங்களின் மூலமும், பல உன்னதமான கருத்துக்களை உலகிற்குத் தந்து உயரிய இடத்தைப் பெற்றவர்கள். இதற்கு திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் போன்றவை சான்றுகள் என்கிறார். இப்படைப்புகள், இலக்கிய இலக்கண நயத்துடன் எப்படி வாழ்க்கை […]

Read more

கோழிப்பாட்டி

கோழிப்பட்டி, ஐ.சிவசுப்பிரமணி ஜெயசேகர், அய்யா நிலையம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 128, விலை 100ரூ. சமகத்தில் புரையோடிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள், சமூக அவலங்களை இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் வாயிலாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்துமே கற்பனை அல்ல. நெஞ்சை உலுக்கும் நிஜங்கள். ஒவ்வொரு சிறுகதையைப் படித்து முடிக்கும்போதும் சோகத்தால் மனம் கனத்துப் போகிறது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோழிப்பாட்டி கதையில் கொள்ளி வைக்க ஆம்புளப்புள்ள வேணும் என்று மார்தட்டும் கோழிப்பாட்டி, அதே ஆம்புளப்புள்ளைகளால் துன்புறுத்தப்படும்போது தானே தனக்குக் கொள்ளி […]

Read more