ஹெலன் கெல்லர்

ஹெலன் கெல்லர், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, அருள்மொழிப் பதிப்பகம், விலை 90ரூ. பார்வையும் இல்லாமல், பேசவோ, கேட்கவோ முடியாத ஒரு பெண்மணி, படித்துப் பட்டதாரியாகி உலகப் புகழ் பெற்ற எழுத்தாளராக விளங்கினார் என்றால் அதிசயமாக இருக்கிறது அல்லவா? அந்தப் பெண்மணியின் பெயர் ஹெலன் கெல்லர். இருபதாம் நூற்றாண்டின் அதிசயப் பெண்மணி. உடல் ஊனமுற்றவர் என்றாலும் மன உறுதி இருந்தால், சாதனை புரியலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்கிய ஹெலன் கெல்லர் வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. நன்றி: தினத்தந்தி, 28/9/2016.

Read more

கம்பரின் மறுபக்கம்

கம்பரின் மறுபக்கம், புலவர் ஆ. பழனி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. ராவணன் சிவபக்தன் அல்ல, சிலப்பதிகாரம் சமண நூல் அல்ல. வஞ்சி என்படுவது கரூர் அல்ல என்பன போன்ற பல புதிய மாற்றுக் கருத்துகளை சான்றுகளுடன் விளக்குகிறார், நூலாசிரியர் புலவர் ஆ. பழனி. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —-   ஒரு வரிச் செய்திகள், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, ஸ்ரீஅலமு புத்தகநிலையம், விலை 70ரூ. போட்டித் தேர்வுக்கு பயன்படும் செய்திகளை ஒரு வரிச் செய்திகளாக தொகுத்தளித்துள்ளார் கள்ளிப்பட்டி சு. […]

Read more

ஜான்சிராணி

ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. ஜான்சிராணி லட்சுமிபாய் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தைச் சேர்ந்தவராகி, பிரிட்டிஷ் பேரரசை ஆட்டம் காணவைத்த வீரமங்கை. இந்திய புரட்சி இயக்கம் கொண்ட வீரர்களிலேயே துணிச்சல் மிக்க, அச்சமற்ற, மிகச்சிறந்த தலைவியாக விளங்குவதை பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டு நூலாசிரியர் விளக்குவது சிறப்பு. அவரைப்போன்று ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் அந்நியரிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் நாட்டினைக் காக்க வீராங்கனைகளாக வீறுகொண்டு எழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: குமுதம், […]

Read more

மோகனம்

மோகனம், தொகுப்பாசிரியர் பேராசிரியர் நிர்மலா மோகன், திருவரசு புத்தக நிலையம், பக். 498, விலை 300ரூ. பேராசிரியர் இரா.மோகனின் முதல் நூல் தொடங்கி அண்மை நூல் வரையிலான படைப்புகள் குறித்த ஆவணமாக இந்நூலைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். பேரா. இரா. மோகனின் படைப்பாளுமை இந்நூல் வழி பதிவு செய்திருப்பது சிறப்பான முயற்சி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/4/2016.   —- ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. வீரமங்கை ஜான்சிராணியின் வாழ்க்கை மூலம் ஒவ்வொரு பெண்ணும் […]

Read more

திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு

திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. திராவிட இயக்கத்திற்காக, நூற்றுக்கணக்கில் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அதுபற்றிய முழு விவரங்களையும் இந்த நூலில் கூறுகிறார் முனைவர் அ.மா.சாமி. வெறும் புள்ளி விவரங்களோடு நின்றுவிடவில்லை. பல சுவையான வியப்புக்குரிய செய்திகளையும் இந்த நூல் விவரிக்கிறது. மாதிரிக்கு ஒன்று. திராவிடன் தினசரிப் பத்திரிகை நடத்தி வந்த வகையில், ரூ.1000 கடனுக்காக, 2.6.2993ல் பெரியாரை கைது செய்து, சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அக்கடனைக் கட்டிவிட, பெரியாரின் நண்பர்கள் முன்வருகிறார்கள். […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சென்னை புக்ஸ், சென்னை, பக். 328, விலை 175ரூ. நமது பாரம்பரியப் பொக்கிஷமான மகாபாரதத்தில், எல்லா காலத்துக்கும் பொருந்தும் வழிகாட்டுதல்கள் நிறைந்துள்ளன. அதர்மமும், ஆவணமும் அழிவை ஏற்படுத்தும், நற்பண்புகளே நல்ல வாழ்க்கையை வழங்கும், தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும் மறுபடியும் தர்மம் வெல்லும் ஆகியவை போன்ற ஒப்பற்ற அறிவுரைகளை கதைப்போக்கிலேயே வழங்கும் மகாபாரதம், படிப்பவர்களிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, ஆத்ம சக்தி ஆகியவற்றை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், இந்த இதிகாசத்தை, இனிமை நிறைந்த நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் கள்ளிப்பட்டி […]

Read more

யாருக்காக இந்தியா

யாருக்காக இந்தியா?, ஆர். நடராஜன், ஆதாரம், பக். 367, விலை 225ரூ. டாக்டர் ஆர். நடராஜன், தினமலர், துக்ளக் ஆகிய பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். இதில் பிரதமருடன் பேட்டி என்ற கட்டுரை துவங்கி, மொத்தம் 80 கட்டுரைகள் உள்ளன. இவை 2012, 2013ம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை. நூலின் துவக்கத்தில் சர்வ வீரிய சர்வாக்ரக, சர்வ வியாபியான இத்தாலிய ஜனன, இந்திய பிரஜா ஸ்நான சோனியா காந்திக்கு இந்த நூல் சமர்ப்பணம் என ஆசிரியர் தனி கட்டம் போட்டு குறிப்பிட்டுள்ளார். […]

Read more