ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, குமுதம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. வாழ்க்கை என்பதே போராட்டம்தான். தினமும் எத்தனையோ பிரச்சினைகளை சந்திக்கிறோம். எதிர்நீச்சல் போடுகிறவர்கள்தான், வாழ்க்கையில் முன்னேற முடியும். பிரச்சினைகளை சமாளித்து, வெற்றி பெறுவது எப்படி என்பதை, சின்னச்சின்ன கதைகள் மூலம் விளக்குகிறார், இராம்குமார் சிங்காரம். ஒவ்வொரு கதையிலும், நம்பிக்கையூட்டும் பொறிகள் பளிச்சிடுகின்றன. வெற்றி பெறுவோர் கையில் இருக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —- வேரென நீ இருந்தாய், வசந்தா அம்பலவாணன், காரைக்கால், விலை 150ரூ. உலகிற்கு நல்லறம் புகட்டிய […]

Read more

வெ. இறையன்பு எழுதிய வேர்வையின் வெகுமதி

வேர்வையின் வெகுமதி, வெ. இறையன்பு, குமுதம் பதிப்பகம். தவத்தை விட வேலையே முக்தி தரும் உழைப்பை போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும், வெ. இறையன்பு எழுதிய வேர்வையின் வெகுமதி என்ற நூலை அண்மையில் படித்தேன். குமுதம் பப்ளிகேஷன், நூலை வெளியிட்டுள்ளது. உழைப்பின் பெருமையை, மகத்துவத்தை நூலின் ஒவ்வொரு பக்கமும் போற்றுகிறது. புராணங்கள், வரலாறு, தற்கால நிகழ்வுகள் மூலம், உழைப்பின் முக்கியத்துவத்தை நூலாசிரியர் விளக்குகிறார். ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் வேலை செய்தால் அவர் வேலையின் விசுவாசி. அவரே 12 மணி நேரம் வேலை […]

Read more

சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை, சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 156, விலை 100ரூ. கல்கி வார இதழில் தொடராக வெளிவந்ததின் நூல் வடிவம். தமிழ் இலக்கியத்தின் புதுமைக் காவியமான சிலப்பதிகாரத்தை புதிய ஆய்வுச் சாலையில் எடுத்துச்சென்றிருக்கிறார் சுப்ர. பாலன். புகார் நகரை பூம்புகாராகக் காணும் நூலாசிரியர். கோவலன், கண்ணகி கால அந்தப் புராதன நகரம், இப்போது களையிழந்து போனதை கனத்த மனதுடன் விளக்குகிறார். கோவலன், கண்ணகி தடம் பதித்த மற்ற இடங்களான ஸ்ரீரங்கம், உறையூர், கொடும்பாளூர் என ஒவ்வோர் ஊரையும் விவரிக்கும் ஆசிரியர், அந்தந்த இடங்களின் […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சென்னை புக்ஸ், சென்னை, பக். 328, விலை 175ரூ. நமது பாரம்பரியப் பொக்கிஷமான மகாபாரதத்தில், எல்லா காலத்துக்கும் பொருந்தும் வழிகாட்டுதல்கள் நிறைந்துள்ளன. அதர்மமும், ஆவணமும் அழிவை ஏற்படுத்தும், நற்பண்புகளே நல்ல வாழ்க்கையை வழங்கும், தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும் மறுபடியும் தர்மம் வெல்லும் ஆகியவை போன்ற ஒப்பற்ற அறிவுரைகளை கதைப்போக்கிலேயே வழங்கும் மகாபாரதம், படிப்பவர்களிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, ஆத்ம சக்தி ஆகியவற்றை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், இந்த இதிகாசத்தை, இனிமை நிறைந்த நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் கள்ளிப்பட்டி […]

Read more