பார்வை தொலைத்தவர்கள்

பார்வை தொலைத்தவர்கள், யோசே சரமாகோ, தமிழில்: எஸ்.சங்கரநாராயணன், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.295. கரோனா காலத்தில் ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (தி ப்ளேக்) நாவல் வாசிக்கப்படுவதில் ஆச்சர்யமில்லை. கொள்ளைநோய் பற்றிய குறியீட்டுக் கதை என்றபோதும் அது நேரடியாகக் கதைசொல்லும் தன்மையில் அமைந்திருக்கிறது. ஆனால், யோசே சரமாகோவின் ‘பார்வை தொலைத்தவர்கள்’ (பிளைண்ட்னெஸ்) நாவலும் இந்தக் காலத்தில் அதிகம் வாசிக்கப்படும் நாவலாக இருக்கிறது. போர்த்துக்கீசிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சரமாகோ இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். 1995-ல் வெளியான இந்நாவல் விதிகளை மாற்றிப் போட்டு விளையாடும் புனைவின் சாத்தியங்களை […]

Read more

மணல்

மணல், பா.செயப்பிரகாசம், நூல்வனம் வெளியீடு,  விலை: ரூ.210. பா.செயப்பிரகாசம் எழுதிய ‘மணல்’ நாவல், சமகால அரசியலைப் பேசுகிறது. ‘மணல்’ என்ற எளிமையான தலைப்பே அதன் கதையையும் அரசியலையும் சொல்லிவிடும். இயற்கையின் சமீபத்திய படைப்பான மனிதன் எப்படித் தன்னுடைய சுயநல உறுபசிக்குப் பெற்ற அன்னையைப் பிய்த்துத் தின்கிறான் என்பதையும், உலகெங்கும் உள்ள இயற்கையின் அடிப்படை ஆதாரங்களை அழிப்பதில் மனிதன் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதையும், முதலாளிகளின் கொள்ளை லாபவேட்டைக் களமாக மக்களின் உழைப்பு மட்டுமல்ல; இயற்கையின் மார்பில் ரத்தம் வரும் வரை உறிஞ்சிக் குடிக்கிற வெறித்தனத்தையும் […]

Read more

அன்பே ஆரமுதே

அன்பே ஆரமுதே, தி.ஜானகிராமன், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.500/- மருத்துவர்கள் எல்லாக் காலத்திலுமே கடவுளுக்கு இணையாகவே மதிக்கப்பட்டுவருகிறார்கள். என்றாலும், இந்த கரோனா காலம் எப்போதைவிடவும் இப்போது மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் மிகுந்த நன்றியுணர்வோடு பார்க்கிற சூழலை உருவாக்கியிருக்கிறது. மனிதர்களின் இன்ப துன்பங்களை விசாரணைக்கு உட்படுத்தும் இலக்கியங்களில் துயரம் தீர்க்கும் மருத்துவர்களுக்கும் இடமில்லாமல் இருக்குமா? தன்னலமற்ற மருத்துவர் ஒருவரைப் பற்றிய மகத்தான சித்திரத்தைத் தமிழுக்கு அளித்திருக்கிறார் தி.ஜானகிராமன். ‘அன்பே ஆரமுதே’ நாவலின் நாயகனான அனந்தசாமி, ஒரு மருத்துவர். எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் இல்லை. சந்நியாசத்தோடு வைத்தியமும் […]

Read more

புத்துயிர்ப்பு

புத்துயிர்ப்பு, லியோ டால்ஸ்டாய், தமிழில்: ரா.கிருஷ்ணய்யா, அடையாளம் பதிப்பகம், விலை: ரூ.395. நெருக்கடியான சூழலில் துவண்டிருக்கும் மனதுக்கு வாசிக்க இதமான புத்தகமாக டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ நாவல் பரிந்துரைக்கப்படுகிறது. ‘உங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு புத்தகம் மட்டும்தான் வைத்திருக்க அனுமதி என்றால், எந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்ற கேள்விக்குப் பலரும் ‘புத்துயிர்ப்பு’ நாவலைச் சொல்கிறார்கள். என்ன காரணம்? வாசகர்களை இந்நாவல் சுயபரிசீலனைக்கு உட்படுத்த முயல்கிறது என்பதுதான் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். இந்நாவலின் பிரதானப் பாத்திரம் நெஹ்லூதவ் ஒரு லட்சியப் பாத்திரமாக இருக்கிறான். அன்றாட வாழ்க்கை […]

Read more

தமிழ் உலா

தமிழ் உலா, பேராசிரியர் இரா.மோகன்,  வானதி பதிப்பகம், விலை ரூ.160. தமிழ் இலக்கியங்களில் உள்ள சுவையான செய்திகளையும், பல கவிஞர்களின் கவிதை நயங்களையும் விளக்கும் கட்டுரைகள் அடங்கிய நுாலிது. இரா.மோகனின் எழுத்தாற்றலைக் கூறும் நுாலாக விளங்குகிறது. கவிதைத் துறைமுகம், செவ்விலக்கியப் பேழை, சான்றோர் அலைவரிசை, தன்னம்பிக்கை முனை என ஆறு பகுதிகளில், 36 கட்டுரைகள் உள்ளன. ‘தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக், பிறகெப்படி பண்பாட்டிற்கு கிடைக்கும் பாஸ் மார்க்?’ என, தி.மு.அப்துல்காதர் கவிதையைப் பாராட்டுவதும், ‘வந்து நின்று வாக்கு கேள், உட்கார்ந்தபடி ஊழல் […]

Read more

தமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு

தமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு,  ஏ.ஜாண் மோரீஸ்,  ஏ.ஜே.எம்.பவுண்டேஷன், விலை ரூ.200. இந்நுாலில், வேலை வேண்டும் என்போர் எப்படி வேலை பெறலாம்? எந்த வலைதளங்களை பார்க்க வேண்டும், எந்த மாதிரி போட்டித் தேர்வுகளை எழுத வேண்டும், வெளிநாடு சென்று பணிபுரிய உதவும் நிறுவனங்கள் வரை தகவல்கள் தரப்பட்டுள்ளன. மாவட்ட தொழில் மையங்களின் விலாசங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில் உள்ள தொழில் வாய்ப்புகள், பயிற்சி மையங்கள், கடனுதவிகள் மற்றும் வங்கிகளின் வலைதளங்கள், கணக்கு எழுத வேண்டியதன் […]

Read more

அறிந்ததும் அறியாததும்

அறிந்ததும் அறியாததும்,  டாக்டர் ஆர்.வேங்கடரமணன்,  பினவுஸ் புக்ஸ், விலை ரூ.140. அறிவியல் என்றென்றும் அறிவுப் பெட்டகம் என்பது உலகமறிந்த உண்மை. கண்டறியப்பட்டு நுாற்றாண்டு கண்ட வேதிப்பொருள் மற்றும் எண்ணற்ற பலன்கள், ‘டைமெதில் சல்பாக்சைடு’ என்கிறார், நுாலாசிரியர் வேங்கடரமணன்.வறுமையின் நிறம் சிவப்பு; தக்காளியின் நிறமும் சிவப்பாகக் காரணம், லைகோபீன்! சிறிதினும் சிறிது கேள் என்கிறது நானோ தொழில்நுட்பம். அது பற்றிய வியத்தகு செய்திகளை, சின்னஞ்சிறு உலகத்தில் குறிப்பிடுகிறார்.தாவர பட்சிணிகள், மாமிச பட்சிணிகள் நாம் அறிந்தவை. மாமிசத்தை உண்ணும் தாவரத்தைப் பற்றிய சுவாரஸ்யமான வேதியியல் தகவல்கள் அடங்கிய […]

Read more

இனப்படுகொலைகள்

இனப்படுகொலைகள்,  குகன்,  விகேன் புக்ஸ், விலை ரூ.140. போர்களின் முடிவுகள், கொள்கை ரீதியிலானவற்றில் எல்லைத் தகராறு, மாறுபாடான புரிதல், தனிமைப்படுத்தும் போக்கு, ஆதிக்க வெறி, சிறுபான்மையினரை ஒடுக்குதல், ஒரு இனத்தை அழிப்பது, மத வெறி முதலான காரணங்கள், கொலை வெறியின் கோரத்தாண்டவமான இனப் படுகொலைகளுக்கு அடிப்படையாக உள்ளன. கொத்து கொத்தாக மடிவது மனித உயிரல்லவா? இந்த இனப் படுகொலை, உலகின் எங்காவது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பேரினப் படுகொலை, தமிழர் இனப் படுகொலை தான். இதை நுாலின் துவக்கமாக […]

Read more

கருத்துக்குவியல்

கருத்துக்குவியல்,  நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன்,  முல்லை பதிப்பகம், விலை ரூ.150. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோருக்கும், நீதி மறுக்கப்பட்டோருக்கும் நியாயம் கிடைக்க உதவும் ஒரே படிப்பு சட்டக் கல்வி தான். இந்த சட்டக் கல்வியின் துணை கொண்டு, அநீதியை வென்று நியாயத்தை நிலைநாட்டக் கூடியவர்களுக்கு, நீதியரசர் லெட்சுமணனின் இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்ற நுட்பத்தை உணர்ந்து, செயலாற்றிய அறிஞர் அண்ணாவின் சிறப்பை இப்புத்தகத்தில் நாம் காணலாம். நீர் இன்றி அமையாது உலகு என்பது போல, மொழி இன்றி அமையாது மனிதனின் வாழ்வு. அப்படிப்பட்ட […]

Read more

திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி

திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி,  உரை ஆசிரியர் : புலியூர்க்கேசிகன், சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், விலை  ரூ.120. வடகரைப் புண்ணிய பூமியின் அரசர் பெருமான் சின்னணஞ்சாத் தேவரின் அரசவைப் பெரும் புலவராக விளங்கியவர் திரிகூட ராசப்பக் கவிராயர். இக்குறவஞ்சியைப் பாடியதும், அன்றைய விஜயரங்க சொக்கலிங்க நாயகரான மதுரை மன்னரின் பாராட்டையும், பரிசையும் பெற்றார்.இலக்கிய நயம் செறிந்த பாடல்களால் ஆனது குற்றாலக் குறவஞ்சி. நாட்டின் பெருமையைக் கூற வந்தபோது கவிஞர் சொல்வார். பாவம் தவிர ஏதும் இங்கே நீங்குவதில்லை. கன்னலும் செந்நெலும் நெருங்குவது தவிரப் […]

Read more
1 2 3 194