பிக்பாஸ்

பிக்பாஸ், தி.குலசேகர், எஸ்.எஸ்.பப்ளிகேஷன், விலை 100ரூ. 15 பேரை நூறு நாட்களுக்கு ஒரு வீட்டுக்குள்ளே அவர்கள் விருப்பத்தோடு இருக்க வைத்து அவர்களது நடவடிக்கைகளை சோதிக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா. மக்களின் மனதில் தனதான தனித்த அடையாளங்களினால், நிரந்தர இடத்தைப் பெற்று விட்டார். அது குறித்து இந்த நூலில் தி.குலசேகர் சுவையாக அலசுகிறார். நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more

துவந்துவ யுத்தம்

துவந்துவ யுத்தம், தி.குலசேகர், தாமரை பிரதர்ஸ் லிமிடெட், பக்.96, விலை 20ரூ. பயணத்தின் போது வாசிப்பதற்கென்றே எழுதும் எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். முன்பெல்லாம் இவர்களின் எண்ணிக்கை அதிகம். குழந்தைகளுக்கான காமிக்ஸ், கார்ட்டூன் படக்கதைகள் முதல், அனைத்து தரப்பினரும் வாசிக்கும் கிரைம் நாவல்கள் என ரயில், பஸ் நிலையங்களில் முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் கிடைக்கும். இப்போது அது குறைகிறது என்ற குறையை சரி செய்ய வந்துள்ளது, ‘துவந்துவ யுத்தம்’ புத்தகம். தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்து, பின் திரைத்துறையில் நுழைந்த தி.குலசேகர் விறுவிறு நடையில் இதை […]

Read more

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம், தி. குலசேகர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083, விலை ரூ. 150 ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். சினிமாவில், தான் பேசாமலேயே தன்னை எல்லோரும் வியந்து பேசும்படி மௌன மொழியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்காட்டியர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த இவரது ஆரம்பகால வாழ்க்கை, வேதனைகளும், சோதனைகளும் நிரம்பியவை. வறுமைக்கும், மாற்றந்தாயின் […]

Read more