நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை,  இறையன்பு, கற்பகம் புத்தகாலயம்,  பக்.232, விலை ரூ.200. நூலாசிரியர் இந்திய ஆட்சிப்பணியின்போது தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு 10 தலைப்புகளில் கட்டுரைகளாக வடித்து நூலாகத் தந்துள்ளார். பெருக்கெடுக்கும் வார்த்தை பிரவாகம், பள்ளி மாணவர்களும் புரிந்து கொள்ளும் அளவு எளிமையான நடை நம்மைக் கவர்கிறது. பணியில் சிறக்க' என்ற தலைப்பில், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பற்றிய ஒப்பீடு, நிறுவனத்தின் வளர்ச்சி, நிறுவனம் சிறக்க ஊழியர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள், கடும் உழைப்புத் திறன் ஆகியவை குறித்து விளக்கமாகத் தெரிவித்துள்ளார். […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை, கே. சிவகாமிநாதன், கலைஞன் பதிப்பகம், பக். 192, விலை 180ரூ. அரசு துறையான ஆவினில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற கே. சிவகாமிநாதன், தன் அனுபவங்களை இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு அரசு அதிகாரியாக, அரசியல் தலைவர்கள், வி.ஐ.பி.,க்கள் என பலரிடமும் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருந்திருக்கிறது. ஒரு தலைமுறைக்கு முன்பு நடந்த பல வரலாற்று தகவல்களையும், சுவையாகக் கூறியுள்ளார். விருதுநகரைச் சேர்ந்த அவர், தனது சொந்த ஊரில் இருந்து, நினைவுகளை தொடங்கியுள்ளார். சாதாரண கிராமமாக இருந்த […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை, டி.வி. சந்திரசேகரன், பாரதி புத்தகாலயம், சென்னை, பக். 263, விலை 180ரூ. வங்கிகளில் வளர்ந்த தொழிற்சங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம் இந்நூல். காலந்தோறும் தொழிற்சங்க இயக்கங்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாவது இயல்பு. ஆனால் அந்த மாற்றங்கள் தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் நிலையான மகிழ்ச்சியைத் தந்தனவா என்பது கேள்விக்குறியே. இந்தப் பின்னணியில் நின்று, தமது 33 ஆண்டுகால தொழிற்சங்க இயக்கத்தின் ஈடுபாட்டு அனுபவத்தை, தன்னுணர்வு தலைதூக்காது, நடுநிலையோடு எழுதியுள்ளார் நூலாசிரியர். தொழிற்சங்க இயக்கத்தின் வரலாற்றை ஸ்டேட் வங்கி இயக்கத்தின் வரலாற்றோடு பகிர்ந்தளிப்பது சிறப்பு. ஸ்டேட் […]

Read more