பயணம்

பயணம், சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி, சமர் யாஸ்பெக், தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, விலை 320ரூ. சிரியாவில் பிறந்து வளர்ந்த சமர் யாஸ்பெக்கின் மிக முக்கியமான பதிவு. போர்ச்சூழலில், கொஞ்சமும் நிச்சயமற்ற சூழலில் இருந்து தப்பி வந்து பாரீஸில் தஞ்சம் புகுந்தவர். சிரிய மக்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஈரமுடைய எவர் மனசுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாதபடிக்கு அங்கே எல்லாமுமே நடக்கிறது. சொந்தநாட்டிலேயே அகதிகளாய் வாழும் பெரும் சோகம் மக்களுக்கு நேர்கிறது. சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர், பயம் இன்றி மீண்டும் […]

Read more

பயணம்

பயணம், சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி, சமர் யாஸ்பெக், தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, பக். 344, விலை 320ரூ. ஒரு பத்திரிகையாளராக, நீதியின் பக்கம் நின்று, தன் பேனா வாளை சுழற்றும் தைரியம் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அந்த வகையில், தான் ஒரு பெண்ணாக இருந்தும், போருக்கு எதிரான அறப்போரை, தைரியமுடன் தொடுத்து, சிரியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர், சமர் யாஸ்பெக். அவரின், ‘பயணம்’ என்னும் இந்நூல், ஜனநாயகத்தின் முதல் அமைதிப் பேரணியில் இருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ். சின் ஊடுருவல் வரையான வாழ்வாதார […]

Read more

பயணம்

பயணம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 392, விலை 350ரூ. இளைஞனும் ஆசாபாசங்களும் தமிழ் புனைகதையில் இதுவரை இல்லாத பல புதிய பரிமாணங்களை முன்வைக்கும் நாவல். செல்வம், செல்வாக்கு முதலியன இலக்காகக் கொள்ளாமல் யோகாசனம், சமூக சேவை ஆகியவற்றை நாடிப் பெற்றோரிடம்கூடக் கூறாமல் ஓர் ஆசிரமத்தில் சேரும் இளைஞனின் கதை. ஏற்கனவே பல யோகாசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஆசிரமத்தின் கிளைகள் எனக் கூறப்படுபவைக்கு அனுப்பப்படுகிறான். ஒரு சமூகக் கிளர்ச்சியில் ஒரு கட்டத்தில் காவல் துறையும் துணை வராது […]

Read more

பயணம்

பயணம், அரவிந்தன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 350ரூ. இனி இந்த வீடு என்னுடையதல்ல என்னும் எண்ணத்துடன் வீட்டைவிட்டு வெளியேறும் இளைஞனான ராமநாதனின் துறவுப்பயணமே 390 பக்கங்களில் விரியும் இந்நாவல். ஒரு இந்து சுவாமியின் ஆசிரமத்தில் சேர்ந்து, ஆசிரமம் செய்கிற சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல கிராமங்களில் அவன் பணியாற்றி தன்னையும் உயர்த்திக்கொள்கிறான். யோகாசனங்களில் சிறந்தவனாக இருக்கும் அவன் தன் பயணத்தில் ஆசான்கள் மூலம் மேலும் திறமைவாய்ந்த யோகாசனப் பயிற்சியாளன் ஆகிறான். ஆனால் அவனால் பிரம்மச்சர்யம் காக்க முடிவதில்லை. ஒரு பெண் மீது […]

Read more