பிளேட்டோவின் குடியரசு

பிளேட்டோவின் குடியரசு, தமிழாக்கம் ஆர். இராமானுஜாசாரி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 412, விலை 230ரூ. மண்ணிலேயே விண்ணரசு ஏற்படுத்த முடியுமா? முடியும் என்கிறது பிளேட்டோவின் குடியரசு. சாக்ரடீஸ் தன்னுடைய மாணவர்களுடன் நடத்தும் உரையாடல்தான் இந்த புத்தகம். இந்த உரையாடல்கள் மூலம் ஒரு சிறந்த குடியரசுக்கான அடிப்படை எவை, அவை எவ்வாறு அமையும், அதில் ஆட்சியாளர்கள், நீதிமான்கள், காவலர்கள், தகுதிகள் என்ன? அத்தகைய குடியரசில் இளைஞர்கள் எப்படி வளர்த்தெடுக்கப்பட வேண்டும், இத்தகைய குடியரசில் எவை தீமைக்கு இடம் அளிக்கும், எவை நன்மையைச் சேர்க்கும், எத்தகைய […]

Read more

திருக்குறளில் காமம்

திருக்குறளில் காமம், இ.கி.இராமசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 188, விலை 125ரூ. ஒரு பொருள் பற்றிய இருபத்து மூன்று அறிஞர்களின் கட்டுரை தொகுப்பு இந்த நூல். திருக்குறளில், காமத்துப்பாலின் சிறப்பு, காமமும், இன்பமும் ஒன்றா, காமம் இழிபொருளாக எப்போது மாறியது, காமம் தரும் கனிந்த வாழ்வு, காமத்துப் பாலும் கானல்வரியும், அகத்திணை மரபும், காமத்துப்பாலும் எனப் பல்வேறு தலைப்புகளில், திருக்குறள் கருத்துக்கள் ஆராயப்பட்டு உள்ளன. காமம் என்பதற்கு சரியான பொருள், நூலின் முதலிலேயே கருத்துரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கிறது. மனமொத்து இருபாலும் […]

Read more