காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நேசம் பதிப்பகம், பக். 136, விலை 90ரூ. காந்தியடிகளின் வாழ்க்கையை மக்கள் மனதில் எளிதில் பதிவு செய்ய முனைவர் ஆவுடையப்பன் எடுத்திருக்கும் உத்தி இது. ஒரு நிகழ்வைச் சொல்லி அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக காந்தியடிகளின் வாழ்வில் நடந்த சம்பவத்தை பொருத்தி விடுகிறார். அதை அந்த உரையாடல் மூலம் நிறைவு செய்வதால் படிப்போர் மனதில் எளிதில் காந்தியின் கொள்கைகள் வந்து உட்கார்ந்துவிடுகின்றன. அகிம்சை, சத்தியம், அன்பு, சகிப்புத்தன்மை, சத்தியாகிரகம் போன்றவற்றை காந்தி எப்படி தன் வாழ்வின் நெறிமுறைகளாகக் […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நேசம் பதிப்பகம், பக். 124, விலை 90ரூ. காந்தியம் எனும் காயகல்பம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பட்டிமன்ற, இலக்கியமன்ற மேடைகளில், தனித்தன்மையுடன் சொற்பொழிவு ஆற்றி வருகிறார், இப்புத்தகத்தின் ஆசிரியர். தேச தந்தை மகாத்மா காந்தி பற்றி, லட்சக்கணக்கான புத்தகங்கள் உலகெங்கும் பதிப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இப்புத்தகத்தில் மொத்தம் 31 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர், தன் நண்பர் புகழ் மதியிடம் உரையாடியபோது, எழுந்த கேள்விகளுக்கு, காந்தியின் வாழ்வில் நடந்த சம்பவத்தை விவரித்து, அதன் மூலம் விடை சொல்கிறார். […]

Read more

சங்கச் செல்வி

சங்கச் செல்வி (செம்மொழிப் பெட்டகம்), முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 128, விலை 60ரூ. சங்க நூல்களில் உள்ள அரிய பொருட்கள் பற்றி அழகாக எடுத்துரைக்கும் 30 சிறிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். யவனர் என்னும் அயல்நாட்டார் பற்றியும், அசுணம் என்னும் விலங்கு பற்றியும் தெரிவிக்கும் இந்த நூல், பண்டைத் தமிழரின் பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் தெளிவாக விளக்குகிறது. வான்கேழ் வட்டம் என்னும் சந்தனம் அரைக்கும் வெள்ளைக்கல், இந்தியாவின் […]

Read more