சங்கச் செல்வி
சங்கச் செல்வி (செம்மொழிப் பெட்டகம்), முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 128, விலை 60ரூ.
சங்க நூல்களில் உள்ள அரிய பொருட்கள் பற்றி அழகாக எடுத்துரைக்கும் 30 சிறிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். யவனர் என்னும் அயல்நாட்டார் பற்றியும், அசுணம் என்னும் விலங்கு பற்றியும் தெரிவிக்கும் இந்த நூல், பண்டைத் தமிழரின் பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் தெளிவாக விளக்குகிறது. வான்கேழ் வட்டம் என்னும் சந்தனம் அரைக்கும் வெள்ளைக்கல், இந்தியாவின் வடபகுதியிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளது முதலான அரிய செய்திகளை தருவதால், இதை பெட்டகம் என்று சொல்வது பொருந்தும். -முகிலை ராசபாண்டியன். நன்றி : தினமலர், 4/12/2011.
—-
இவனே என்கிற மனிதன், சந்திரா மனோகரன், ஓவியா பதிப்பகம், 9.6.18/2, ஒற்றைத்தெரு, வத்தலக்குண்டு 642 202, பக். 144, விலை 65ரூ.
சிகரம் இதழில் ஆசிரியராக விளங்கும் நூலாசிரியர், நல்ல சிறுகதை எழுத்தாளராகவும், திகழ்வது இந்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் நன்கு வெளிப்பட்டிருக்கிறது. அன்றாடம் நாம் பார்க்கிற மனிதர்கள், நடக்கிற சம்பவங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்த சிறுகதைகளைப் படைத்துள்ளார். -எஸ். திருமலை. நன்றி : தினமலர், 4/12/2011.
—-
புள்ளிகள், கோடுகள், பாதைகள், ராஷ்மி பன்சால், தமிழில்-ரவி பிரகாஷ், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக். 448, விலை 175ரூ.
எம்.பி.ஏ. படிப்பு இல்லாமல் சொந்தமாக தொழில் தொடங்கிய துடிப்புமிக்க 20 தனிநபர்களின் கதை. தங்களை நிரூபிக்க வேண்டும் என்கிற ஆசை, அவர்களை வழி நடத்தியது, சுவையான, ஈடுபாடுடனான, அர்த்தமுள்ள வாழ்க்கைகள். பெரிதாகக் கனவு கண்டு அதை நனவாக்கிக் கொள்ள கவர்ச்சியான பட்டமோ பணக்கார அப்பாவோ தேவையில்லை. உழைப்பும், முனைப்பும் இருந்தாலே போதும். Connect the Dots என்ற தலைப்பில் ராஷ்மி பன்சால் எழுதி, பரபரப்பாக விற்பனையாகும் ஆங்கில புத்தகத்தின் அருமையான தமிழ் வடிவம். இந்த புத்தகத்தில் கொல்லப்பட்டிருக்கும் தொழில் அதிபர்களின் கதிகள், உங்களை உற்சாகப்படுத்தும். சாதனைகள் செய்ய ஊக்குவிக்கும். அருமையான கிரியா ஊக்கி. -எஸ்.குரு. நன்றி : தினமலர், 4/12/2011.