விகடன் இயர்புக் 2022

விகடன் இயர்புக் 2022, பதிப்பாளர் பா.சீனிவாசன், விகடன் பிரசுரம், விலை:ரூ.275. 10 -ம் ஆண்டாக வெளியாகி இருக்கும் இயர்புக் 2012 நூலில், பல்வேறு நாடுகளின் மக்கள் சந்தித்த முக்கிய பிரச்சினைகள், உலகம், இந்தியா, தமிழகம் ஆகியவற்றின் நடப்பு நிகழ்வுகள், மத்திய அரசின் 2021-ம் ஆண்டின் பட்ஜெட் முக்கிய அம்சங்கள், பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்கள் விவரம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வுகளில் பங் கேற்பவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் யு.பி. எஸ்.சி. தேர்வு வினா-விடை, தேர்வு அட்டவணை, குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் அனுபவக் […]

Read more

தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!, மருத்துவர் பி. மைக்கேல் செயராசு, விகடன் பிரசுரம், விலை 220ரூ. நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு நம் முன்னோர் மூலிகைகளையே நம்பி இருந்தனர். மூலிகைகள் நோயைக் குணமாக்கியதோடு, நோய் மீண்டும் தாக்காமலும் தடுத்தாட்கொண்டன! நீரிழிவை நீக்கும் விளா, வாத நோயைத் தீர்க்கும் நொச்சி, காமாலையை விரட்டும் கீழாநெல்லி என நம்மைச் சுற்றியுள்ள செடிகொடிகளின் மருத்துவ மகத்துவத்தை விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். நன்றி: தமிழ் இந்து, 26/2/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

பாபாயணம்

பாபாயணம், ஜி.ஏ. பிரபா, விகடன் பிரசுரம், விலைரூ.350. ஷீரடி சாய்பாபா பற்றி ஏராளமான நுால்கள் வந்த வண்ணமாக உள்ளன. பாபா பற்றி, ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். பாபாவின் அற்புதமான நிகழ்வுகள், அருட்செயல்கள் அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷீரடியில் காலை ஆரத்தியில் துவங்கும் இதில், ‘பாபாவும் நானும்’ என்ற தலைப்பில் பிரபலமானவர்களின் அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பாக உள்ளன. பக்கம் பக்கமாக பாபாவின் படங்கள் பரவசம் ஊட்டுகின்றன. பாபாவின் பக்தர்களுக்கு நல்ல படைப்பு. – பின்னலுாரான் நன்றி: […]

Read more

பணம் தரும் மந்திரம்

பணம் தரும் மந்திரம் – உங்களை செல்வந்தராக மாற்றும் எளிய வழிகாட்டி,  எஸ்.கே.முருகன், விகடன் பிரசுரம்,  பக்.176, விலை  ரூ.125. பணம் சம்பாதிப்பது என்பது மனித வாழ்க்கையின் ஓர் அடிப்படைத் தேவையாகிவிட்டது. பணமின்றி ஓரணுவும் அசையாது. ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி? அதற்கான வழிமுறைகள் எவை? பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்துவிடலாமா?என்பன போன்ற கேள்விகளுக்கு மிக எளியமுறையில் பதில் சொல்கிறது இந்நூல். பணம் சம்பாதித்து வாழ்வில் உயர்நிலையில் உள்ள திருபாய் அம்பானி, பங்குச் சந்தையில் உச்சம் தொட்ட வாரன் எட்வர்ட் பஃபெட், தன்னுடைய […]

Read more

தமிழரின் சமயங்கள்

தமிழரின் சமயங்கள், அருணன், விகடன் பிரசுரம், விலைரூ.220 தமிழரின் மதங்கள் சாம்ராஜ்ஜிய காலங்களில் எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் நுால். நாயக்கர் காலம், ஆங்கிலேயர் ஆட்சி காலம், நவீன காலம் என பகுப்பாய்வு செய்து, தமிழரின் சமயச் சார்பு பற்றி ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால். கிறிஸ்துவ மதம் தமிழர்களிடம் பரப்பப்பட்ட விதம், இஸ்லாமியர் மதம் பரப்ப முனைப்பு காட்டாததற்கான காரணம், நாட்டார் தெய்வ வழிபாடு பற்றிய விபரங்களும் அலசி ஆராயப்பட்டுள்ளன. ஹிந்து மதத்தில் உள்ள பெரும் பிரிவுகள், அவற்றில் உள்ள வேறுபாடுகள் பற்றி […]

Read more

மகா பெரியவா

மகா பெரியவா, வீயெஸ்வி, விகடன் பிரசுரம், விலை 350ரூ. காஞ்சி மடாதிபதியாக இருந்தவரும், பக்தர்களால் மகா பெரியவா என்று அழைக்கப்பட்டவருமான சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் விரிவான வாழ்க்கை வரலாறு இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. அவர் நிகழ்த்திய அற்புதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அவர் பிறந்தது முதல் முக்தி அடைந்தது வரை நடைபெற்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கைக் குறிப்பை விவரித்து வரும் அதே நேரம், இடையிடையே காஞ்சிப் பெரியவர் வழங்கிய உரைகளின் சுருக்கமும் தரப்பட்டு இருக்கிறது.  காஞ்சிப் பெரியவருக்கும், ஆங்கிலேயரான பால்பிரண்டன் […]

Read more

விதையாக இரு

விதையாக இரு, வழக்கறிஞர் த.இராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 210ரூ. தமிழ் இலக்கியங்களில் அனைவருக்கும் பயனளிக்கும் கருத்துகள் ஏராளம் இருப்பதை இந்த நூல் சுட்டிக்காட்டி இருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பாடல்களை எடுத்துக்கூறி, அவற்றில் காணப்படும் வாழ்க்கைக்குத் தேவையான முன்னேற்ற சிந்தனைகள் என்ன என்பது, ஆர்வத்துடன் படிக்கும்வகையில் தரப்பட்டு இருக்கின்றன. அவ்வையார் பாடல்கள், உலகநீதி, வெற்றிவேற்கை, திரிகடுகம், நீதிவெண்பா, திருமந்திரம் போன்றவற்றின் இலக்கிய வரிகள் கூறும் அறநெறிகள், ஆங்காங்கே கதை வடிவிலும் உரை நடையாகவும் கொடுத்து இருப்பது அனைத்துக் கருத்துகளையும் படிக்க […]

Read more

இறையுதிர் காடு

இறையுதிர் காடு, இந்திரா சவுந்தர்ராஜன், விகடன் பிரசுரம், விலைரூ.1350. நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க, போகர் என்னென்ன பாஷாணங்கள் பயன்படுத்தினார்; உறுதித் தன்மைக்கு, என்ன கலவை கலந்தார். இதற்காக, எங்கெல்லாம் சென்று மூலிகை சேகரித்தனர் என விவரிக்கிறது இந்நுால். முருகன், சர்வரோக நிவாரணி என்கின்றனரே அது உண்மையா? ஹிந்து சமயத்தில் எவ்வளவோ கடவுள்கள் இருக்க, போகர் பிரான், எதனால் முருகனை பாஷாணத்தில் கட்டமைத்தார்? அழகிய கோலங்களை பொருட்படுத்தாமல், ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகனை செய்தார்? போன்ற கேள்விகளுக்கான விடையை விவரிக்கிறது. ஆனந்த விகடனில், 87 […]

Read more

பாபாயணம்

பாபாயணம், ஜி.ஏ.பிரபா, விகடன் பிரசுரம், விலை 350ரூ. மதபேதம் இல்லாமல், அனைவருக்கம் அருள் மழை பொழியும் சாய்பாபா, நிகழ்த்திய ஏராளமான அற்புதங்கள் இந்த நூலில் தொகுத்துத்து தரப்பட்டு இருக்கின்றன. சாய்பாப நிகழ்த்திக் காட்டிய அருஞ்செயல்கள், அவர் தொடர்பான வியப்பான சம்பவங்கள், அவர் தொடர்பான வியப்பான சம்பவங்கள் அனைத்தும் படித்துப் பரவசம் அடையும் வகையில் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதுவரை அதிரகம் பகிரப்படாத பாபாவின் அற்புத நிகழ்வுகளையும் இதில் காணமுடிகிறது. இவை, சாய்பாபாவின் உயிரோட்டம் நிறைந்த வண்ணப்படங்களுடன் கொடுக்கப்பட்டு இருப்பதால் மனதை ஈர்க்கின்றன. […]

Read more

விதையாக இரு

விதையாக இரு, முன்னோர்கள் சொன்ன முன்னேற்றச் சிந்தனைகளின் தொகுப்பு, த.இராமலிங்கம், விகடன் பிரசுரம், பக்.224, விலை ரூ.210. தமிழ் இலக்கியங்களில் நம் முன்னோர் கூறிச் சென்ற கருத்துகள் இன்றைய வாழ்வுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை விளக்கும் நூல்.தமிழின் அறநெறி நூல்களாகிய இன்னா நாற்பது, இனியவை நாற்பது, விவேகசிந்தாமணி, நீதி வெண்பா, திரிகடுகம், வெற்றி வேற்கை ஆகியவை மட்டுமல்ல, சங்க இலக்கிய நூலான புறநானூற்றிலும் கூறப்பட்டுள்ள வாழ்க்கைநெறிகள் நமது வாழ்வுக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. முயற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கும் […]

Read more
1 2 3 31