இலக்கிய வீதி இனியவன்

இலக்கிய வீதி இனியவன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 224, விலை 150ரூ.

இலக்கிய வீதி என்ற அமைப்பின் மூலம் வளரும் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து, வளர்ந்தெடுத்த இனியவனின் வாழ்க்கை வரரலாற்றை எழுதியுள்ளார் ராணிமைந்தன். இனியவனின் பண்புகள், அவர் தொடங்கிய அமைப்பு, அதன் நோக்கம், அவரது இளம்பிராயம் தொட்டு அவரது எழுத்தாற்றல், இலக்கியத்திற்காக அவர் பட்டபாடு, எழுத்தாளர்களுக்கு அவர் அளித்த ஊக்கம், கம்பன் கழக விழா உள்ளிட்ட அவர் நடத்திய பல்வேறு விழாக்கள், எழுத்துலக மேதைகள் முதல் அவரால் ஊக்கம் பெற்ற அறிமுக எழுத்தாளர்கள் வரை எதையும் விடாமல் பதிவு செய்துள்ளார் ராணிமைந்தன். சாதாரண வாழ்க்கை வரலாற்று நூல் போல் இல்லாமல், படிக்கப் படிக்க இலக்கியத் தகவல்களாக வந்து குவிகின்றன. நன்றி: குமுதம், 15/12/2014.  

—-

வாஸ்து, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ.

வாஸ்து சரித்திரம் என்பது ஒரு நிலத்தில் கட்டுவதற்குரிய முறைகளை விளக்கும் ஒரு வேதம் சார்ந்த துறையாகும். இந்த நூலில் தனி வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான வாஸ்து முறை, விளக்க வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டிடக்கலை வல்லுநர்களும், கட்டிடக்கலை (சிவில்) மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த நூலை முரளி சர்மா எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 17/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *