இளவேனில் கட்டுரைகள்
இளவேனில் கட்டுரைகள், கார்க்கி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
எழுத்தாளர் இளவேனில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு, இளவேனில் எழுத்தில் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இளவேனில் எழுத்தில் ஆர்ப்பரிக்கும் அருவியையும், அமைதியான நதியையும் காணலாம். பாட்டாளிகளுக்காக பரிந்து பேசுவதையும், ஏழைகளுக்காக வரிந்து கட்டுவதையும் பார்க்கலாம். சமூகக் கொடுமைகளைச் சாடுகிறார். பொதுவுடைமை கருத்துகளுக்குப் பொலிவு தேடுகிறார். நன்றி: தினத்தந்தி, 20/7/2014.
—-
பெண்கள் திலகம் பாத்திமா, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 35ரூ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா (ரலி) வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். மாதர்குல மாணிக்கம் என்று போற்றப்படும் பாத்திமாவின் சீரிய வரலாறு, பெண்களுக்கோர் முன்மாதிரியாகத் திகழ்கிறது. அந்த வரலாற்றை எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுத்தாளர் எம்.ஆர்.எம்.முகம்மது முஸ்தபா எழுதியுள்ளார். சிறிய நூலாக இருந்தாலும் பெண்களுக்கு பயனுள்ள சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 20/7/2014.
—-
மின்னல் பூக்கள், இளவல் ஹரிஹரன், லோகம் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை ஹைகூ கவிதைகளாக எழுதப்பட்டுள்ள நூலாகும். ஒவ்வொரு கவிதைகளுக்கும் ஏற்றார்போல் வண்ணப்படங்களும் வெளியாகியிருப்பது கூடுதல் சிறப்பை தருகிறது. நன்றி: தினத்தந்தி, 20/7/2014.