உன்னால் முடியும்
உன்னால் முடியும், சந்தனம்மாள் பதிப்பகம், வி.ஜி.பி. தலைமை அலுவலகம், சென்னை, விலை 150ரூ.
ஏழையாக இருந்தாலும், புத்திசாலித்தனமும், கடும் உழைப்பும் இருந்தால் உச்சியைத் தொடலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர்கள் வி.ஜி.பி. சகோதரர்கள். மூத்தவர் பன்னீர்தாஸ் யாரும் எதிர்பாராத விதத்தில் இளமையிலேயே காலமாகிவிட, அந்த மாபெரும் நிறுவனத்தை கட்டிக்காத்து, மேலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். தன்னைப்போலவே மற்றவர்களும் வளரவேண்டும் என்ற பரந்த உள்ளம் படைத்த வி.ஜி.சந்தோஷம் அதற்கான வழிகளைக் கூறுகிறார் உன்னால் முடியும் என்ற இந்த நூலில். உழைப்பால் உயர்ந்தவர்களான ஜேப்பியர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர், டாக்டர் பச்சமுத்து, வி.ஐ.டி.பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அச்சி மசாலா ஐசக் பத்மசிங், ஓட்டல் சரவணபவன் ராஜகோபால் போன்றோரின் வாழ்க்கையை எடுத்துக்காட்டி, இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்போருக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி. நன்றி: தினத்தந்தி.
—-
மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி?, ஏ.கே.சேஷய்யா, சாய்பாபா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
அவசர உலகத்தில் அனைத்து செயல்களும் அவசரம் அவசரமாகச் செய்ய வேண்டியிருப்பதால், மனிதர்கள் அவசரமா செயல்பட வேண்டியிருக்கிறது. அமைதிக்கும் நிதானத்துக்கும் இடமில்லை. இரண்டும் இல்லாத போது மன அழுத்தம் எளிதாக ஏற்படுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகின்றனர். மவுனம், தியானம் போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தம் ஏற்படாமல் வாழ முடியும் என்று பல கருத்துக்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி; தினத்தந்தி.