கம்ப வனத்தில் ஓர் உலா

கம்ப வனத்தில் ஓர் உலா, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை175ரூ.

கம்ப ராமாயணத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்ற வியப்பு, இந்த நூலைப் படிக்கும் போது உண்டாகிறது. கம்ப ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு வித்தியாசமான விஷயங்களைப் புதிய கோணத்தில் பார்த்து, அதனை ருசிகரமாகத் தந்துள்ளனர். பட்டிமன்றப் பேச்சாளர்கள், தமிழ் அறிஞர்கள் என ஒன்பது பேர் ஆக்கித் தந்து இருக்கும் இந்தக் கட்டுரைகள் நவமணிகள் போல ஜொலிக்கின்றன. கம்பனில் தாய்மை, கம்பனில் நிறுவன மேலாண்மை, கம்பனில் தேவாரம் போன்ற கட்டுரைகள் கம்ப ராமாயணத்தை புதிய நோக்கில் அணுகி இருக்கின்றன. இவற்றைத் தொகுத்துத் தந்த சாலமன் பாப்பையா பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 8/7/2015.  

—-

உலக அறிஞர்களின் சிந்தனைகள், கமலா கந்தசாமி, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 30ரூ.

திருக்குறளின் முக்கியக் கருத்தும், அதனை வலியுறுத்தும் பல அறிஞர்களின் கருத்தும் கொண்ட சுயமுன்னேற்ற நூல். நன்றி: தினத்தந்தி, 8/7/2015.

Leave a Reply

Your email address will not be published.