செங்கிஸ்கான் பேரர்கள்
செங்கிஸ்கான் பேரர்கள், தாழை மதியவன், தோணித்துறை வெளியீடு, தாழையான் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ.
இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் சிலரைப் பற்றிய வரலாற்றை சிறுகதையாகத் தந்துள்ளார் நூலாசிரியர். முகம்மது பின் காசிம், கியாசுதீன் பல்பன், முகம்மதுபின் துக்ளக், ஜகாங்கீர், ஷாஜகான் போன்ற மன்னர்களின் அகம் புறம் பற்றி பேசும் கதைகள். படிக்கப் படிக்க புத்துணர்ச்சி. தாஜ்மகால், குதுப்மினார், செங்கோட்டை என கோட்டைக் கொத்தளங்களைக் கட்டியவர்கள், நல்லதோர் வலுவான சமூகத்தைக் கட்ட முடியாதுபோனதைப் பற்றிய கவலை உண்டாக்கும் கதைகள். முகலாய மன்னர்களின் வரலாறு பற்றிய கூடுதல் தகவல்கள் கதைகளில் உண்டு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 12/10/2015.
—-
கு.ப.ராஜகோபாலன், இரா.மோகன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 50ரூ.
சாகித்ய அகாதெமி வெளியிட்டு வரும் இந்திய இலக்கியச் சிற்பிகள்வரிசையில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியின் இரண்டாம் காலகட்டத்தில் இடம் பெறும் கு.ப.ராஜகோபாலனின் வாழ்வையும் எழுத்தையும் அறிமுகப்படுத்தும் நூல். சிறுகதை, நாவல், வசன கவிதை, ஓரங்க நாடகம், இலக்கியத் திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, சிந்தனைக் கட்டுரை மொழிபெயர்ப்பு எனப் பல்துறையில் தடம் பதித்த கு.ப.ராவின் படைப்புலகை முழுமையாகக் காண்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கு.ப.ரா. என்றொரு மானுடன் பகுதியில் கு.ப.ரா.வின் வாழ்க்கை பற்றிய கருத்தோட்டத்தை ஆய்வு நோக்கில் நூலாசிரியர் படைத்திருப்பது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 12/10/2015.