மொழித்திறன்
மொழித்திறன், முனைவர் வே. சங்கர், நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி – 3, பக். 224, விலை 120ரூ.
தமிழ் மொழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பேச்சில், எழுத்தில் வரும் பிழைகளும், அவற்றை நீக்கும் முறைகளும், கடிதம், கட்டுரை, கவிதை, மொழி பெயர்ப்பு, செய்திகள் அனுப்பல் என்று 30 தலைப்புகளில் பிழையற எழுதும் திறனை வளர்க்கிறது இந்நூல். இதிலுள்ள, சில பழைய தேர்வு முறைகள் இன்று நீக்கப்பட்டுவிட்டன. உதாரணமாக, சுருக்கி வரைதல் தரப்படுவதில்லை. தந்தி அனுப்புதல், பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிவதில்லை. தேர்வுக்குத் துணை நிற்கும் பயிற்சி நூல். -முனைவர் மா.கி. ரமணன்.
—-
கொல்லி மலை பழங்குடிகளின் வாழ்வும், வரலாறும், பாலமுருகன், அகல்யா வெளியீடு.
தென்னிந்தியாவில், மிகப் பெரிய வளமாக காணப்படும், மலைகளில் கொல்லி மலை முக்கியமானது. இந்த மலை பண்டைய காலம் முதல் இன்று வரை, பல இலக்கிய சிறப்புகளையும், வரலாற்று சிறப்புகளையும் உள்ளடக்கியமாக விளங்குகிறது. பண்டைய காலத்தில் சித்தர்கள் பலர் இந்த மலைக்குகைகளில் வாழ்ந்து, இங்கு கிடைக்கும் மூலிகைகளை கொண்டு, மக்களின் நோய்களை தீர்த்து வைத்தனர். தற்போது இங்கு வாழும் பழங்குடியினர், தமிழகத்தின் பல்வேறு வகை, பழங்குடி மக்களிடம் இருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் விளங்குகின்றனர். இந்த மலையில் வாழும் பழங்கடிகள், தங்களுக்கென ஒரு தனி வரலாற்றையும், சமூக கூட்டமைப்பையும் ஏற்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பஞ்சாயத்து அமைப்பு, வாழ்வியல் சடங்குகள், நம்பிக்கைகள், மருத்துவ முறைகள் குறித்து இந்நூலில் விரிவான முறையில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 222 பக்கங்களுடன் நூல் வெளிவந்திருக்கிறது. நன்றி: தினமலர், 09/06/2013