வாலி 100

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், சென்னை, பக். 212, விலை 130ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html தலைமுறைகளைக் கடந்தும் ஜெயித்த திரையுலக ஜாம்பவான் வாலி பற்றிய 100 சுவையான செய்திகளின் தொகுப்பு. இவை செய்திகளல்ல. ஒவ்வொன்றும் ஒரு பதிவு. அடுத்த தலைமுறையினருக்கு வாலி பற்றிய ஒரு பாடம். வாலியின் துணிவு, நன்றி உணர்வு, நட்பு, நகைச்சுவை, எளிமை, ஈகோ இல்லாத மனம், யாருக்கும் தலைவணங்கா மாண்பு, தீராத தேடல், அவரது பட்டறிவு என்ற வாலியைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வு மூலம் வாலியை கௌரவிக்கும் முயற்சி இது. சினிமா, அரசியல், இலக்கியம், இசை என்று எதை எடுத்தாலும் அதில் வாலியின் இருப்பைச் சொல்லும் எளிய தொகுப்பு. நன்றி: குமுதம், 10/9/2014.  

—-

சீனப்பொருட்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும், ஆ. சண்முகவேலாயுதன், திருக்குறள் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 75ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-295-6.html சீனப்பொருட்கள் இந்தியாவில் வந்து குவிவதையும், அதனைத் தடுக்க முடியாதபட்சத்தில் அதற்கு மாற்றாக ஒன்றை உருவாக்க என்ன வழி என்பதையும் புதிய நடைமுறைத் தந்திரங்களுடன் சொல்லும் நூல். இதில் தொழில்முனைவோர் செய்ய வேண்டியது என்ன? அரசு செய்ய வேண்டியது என்ன? என்ற புள்ளிவிவரங்கள் பயனுள்ளவை. உள்நாட்டுத் தொழிலை இறக்குமதியிலிருந்து காக்க, ஏற்றுமதித் தொழில் நிறுவனங்களை தயார் செய்வதன் அவசியத்தையும் இந்திய தொழில் நிறுவனங்களை நலிவிலிருந்து காக்க, வங்கிகளும் கல்வி நிறுவனங்களும் ஆற்றவேண்டிய பணிகளையும் பட்டியலிட்டிருப்பது சிறப்பு. மொத்தத்தில் நடுத்தர, சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நல்ல கையேடு. நன்றி: குமுதம், 10/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *