விஸ்வபிரம புராணம்
விஸ்வபிரம புராணம், வி. சுப்பிரமணியன் ஆச்சாரி, நிர்வாக டிரஸ்டி, பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஆசாரியர் பவுண்டேஷன், 70, முதல்தளம், 1, பி, கிராஸ், இரண்டாவது மெயின்ரோடு, 5வது பிளாக், கிருஷ்ணா லே அவுட், பானசங்கரி, 3வது ஸ்டேஜ், பெங்களூரு 560085, விலை 650ரூ.
வடமொழியில் புகழ் பெற்ற நூல் விஸ்வபிரம புராணம். இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 1894ம் ஆண்டில் முதல் பதிப்பு வெளிவந்துள்ளது. இப்போது 119 ஆண்டுகளுககுப் பிறகு மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வைதீகர்களுக்கும், புரோகிதர்களுக்கும் ஜோதிடர்களுக்கும் பயனளிக்கக்கூடிய நூல் இது. நன்றி: தினத்தந்தி, 9/10/13.
—–
ஓஷோ 1000, மு. அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், பக் 272, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-5.html
ஓஷோ உலக ஆன்மிக தத்துவ ஞானத்தின் ஒட்டுமொத்த கலைக்களஞ்சியம் என்பதைக்கற்றறிந்தோர் அனைவருமே அறிவர். அவருடைய அற்புதமான ஞானப் பிழிவுகளினின்று ஆயிரம் தேன் துளிகளைச் சேகரித்து வைத்துள்ள தேனடை போன்ற இந்நூல். இருள் என்பது குறைவான வெளிச்சம் என்பதன்றி வேறில்லை, பயம் என்பது செயற்கை மரணம், நல்ல மனிதனின் கை, தராசுக்குச் சமம். உங்களுக்கு எது நிகழ்ந்தாலும் இப்படி ஆயிரம் கருத்துகள் இதில் உள்ளன. ஓஷோவே ஒரு ஞானப் பிழிவு. அவரது பல நூல்களின் பிழிவாக இந்த நூலை உருவாக்கியுள்ளார் அப்பாஸ் மந்திரி. நன்றி: தினமலர், 8/9/2013