அட்டவீரட்டத் தலங்கள்

அட்டவீரட்டத் தலங்கள், அ. அறிவொளி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 152, விலை 45ரூ.

சிவபெருமான் திருவிற்குடி, திருவதிகை, திருப்பறியலூர், திருக்கண்டியூர், திருக்குறுக்கை, திருவழுவூர், திக்கடவூர், திருக்கோவிலூர் ஆகிய எட்டுத் திருத்தலங்களில் நிகழ்த்திய வீரச் செயல்களை விளக்குவதால் இவ்வெட்டுத் தலங்களும் அட்டவீரட்டத் தலங்கள் எனப்படும். அட்டவீரட்ட திருத்தலங்களின் காரணங்களாக படைப்பு முழுவதற்கும் எட்டு ஆதாரங்கள் சொல்லப்பெற்றுள்ளன. அவை அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் ஒத்துவரும். இந்த எட்டிலும் இறைவனின் சக்திரகள் கலந்து நிறைந்துள்ளன. இவையே இந்தப் படைப்பைக் காத்து வருகின்றன. இப்படிப்படைப்பு முழுவதிலும் விரவிக்கிடக்கும் ஆதாரப் பகுதியை நினைத்து வணங்கும் கோயில்களே அட்ட வீரட்டத் தலங்கள் ஆகும் என்கிறார் நூலாசிரியர். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பகவத்கீதை முதலிய பல நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கிறார். இறைவன் ஏகன், அதே நேரத்தில் அந்த ஏகனே அநேகமாகவும் பரவி இருக்கிறான். இவ்வாறு அநேகனாக விரியும் அவனை எட்டில் வகைப்படுத்தி அட்ட மூர்த்தி என்று வழங்குவர் என்பதை வீரட்ட மூர்த்திகள் என்ற பகுதிடியல் விளக்கியுள்ளார். திரிபுரம் எரித்தது (திருவதிகை-ஆகாயம்), ஜலந்தரனை வதம் செய்தது (திருவிற்குடி-காற்று), தக்கன் யாகம் அழித்து (திருப்பறியல்-நெருப்பு), மன்மதனை எரித்தது(திருக்குறுக்கை-நீர்), எமனை அழித்தது (திருக்கடவூர்-நிலம்), கயாசுரனை வதம் செய்தது (திருவழுவூர்-மனம்), அந்தகனை அழித்தது(திருக்கோவல்-புத்தி), பிரம்மன் தலை கொய்தது(திருக்கண்டியூர் அங்காரம்)ஆகிய எட்டுத் தலங்களே வீரட்டத் தலங்களாகும். இவ்வெட்டுத் தலங்களிலும் இறைவன் நிகழ்த்திய இவ்வீரச் செயல்கள், உயிர்களின் ஆணவத்தை அழிக்கும் பொருட்டே ஆகும். இதன் மூலம் உலக உயிர்கள் ஆணவம் அழிவைத் தரும் என்பதை உணர வேண்டும் என்பதற்கேயாகும். நன்றி: தினமணி, 2/2/2014.  

—-

 

பலன் தரும் ஆன்மிக குறிப்புகள், நாகை. எம்.பி. அழகியநாதன், டிகே பப்ளிஷர்ஸ், 14/10, சாய்ராம் அவென்யூ, ஜெய் கார்டன், வளசரவாக்கம், சென்னை 87, விலை 30ரூ.

திருமண வீட்டில் வாழைமரம் ஏன்? ஆபரண தத்துவம் என பல்வேறு ஆன்மிகக் குறிப்புகள் அடங்கிய பெட்டகமாக இந்நூல் வெளியாகியுள்ளது. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *